செவ்வாய், 12 மார்ச், 2013

அழகு

ஏழு வயதுகள் மட்டுமே நிறைந்த 3ம் தரம் படிக்கும்  என் மகனின் முதல் கவிதை. அழகு என்ற தலைப்பில். (இந்தியா திருச்சியில் இருந்து மகளீர் தினத்தில எழுதியது.)



அழகு.

நீல வானம் அழகு - அதில்
பறக்கும் குருவிகள் அழகு
பச்சைப்பசேல் மரங்கள் அழகு- அதில்
மலரும் மலர்கள் அழகு

உயர்ந்த மலைகள் அழகு -அதில்
வளரும் தேயிலை அழகு
நீண்ட கடல் அழகு - அதில்
விளையும் முத்து அழகு

பூக்களின் இதழ்கள் அழகு - அதில்
தேனுறிஞ்சும் தேனீ அழகு
பச்சை புல்வெளி அழகு - அதில்
மேயும் பசு அழகு


மு.ஷதுர்ஜன்.(குட்டி வல்வையூரான் )

6 கருத்துகள்:

  1. மேன்மைமிகு கவியீன்றாய்
    அழகான மருமகனே..
    ஆன்றோர்கள் கூடிநிற்கும்
    சான்றோர்கள் சபைதனிலே
    கோலேச்சும் மன்னவனாய்
    கவிக் கோலேச்சும் மன்னவனாய்
    புவிவலம் சுற்றி வா!!

    வாழ்த்துக்களுடன் என் அன்பு முத்தங்கள் மருமகனுக்கு...

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அழகு... ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்... (மு.ஷதுர்ஜன் [குட்டி வல்வையூரான்] அவர்களிடமும் சொல்லி விடுங்கள்...

    பதிலளிநீக்கு
  3. உங்களின் தளம் பற்றிய சிறு அறிமுகம்
    காண : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  4. அழகுக்கு அழகு சேர்த்த வரிகள் வாழ்த்துக்கள் கண்ணா.

    பதிலளிநீக்கு
  5. அழகா எழுதியிருக்கான் குட்டி வல்வையூறான்.... சூப்பர் கவிதை... வாழ்த்துகள் சொல்லிடுங்கோ!!!

    பதிலளிநீக்கு