தாயின் வயிறு விட்டு
தரணிக்கு வந்த
தமிழ்த் தாயின் குழந்தைகள் நீங்கள்
தலைவன் அணி சேர்ந்துதன்னையே தந்து
தமிழினம் காத்த காவல்தெய்வங்கள் நீங்கள்
விண்ணிலும் வென்று மீண்டு
விளையாட்டாய் சமராடி
வியக்க வைத்த வித்தகர்கள் நீங்கள்
கடலிலும் காவியம் படைத்துகலங்களையும் வென்று
கடலலையென ஆர்ப்பரித்த கற்பூரங்கள் நீங்கள்
தரைவழி வந்த பகைக்கு
தலையிடி கொடுத்து
தம்மையே ஆகுதியாக்கிய தற்கொடையாளிகள் நீங்கள்
கார்த்திகை மாதங்களில் வந்து
கண்விழித்துக் காட்டி
கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள் நீங்கள்.
பாடல்களின் கருவாகி நின்று
பகையதை ஒடுக்கிய
பண்பாளர்கள் மண்ணில் விதையானமாவீரர்கள் நீங்கள்.
வல்வையூரான்
| Tweet | |||||

