சனி, 24 நவம்பர், 2012

காந்தள்கள் முகம் (ஹைக்கூக்கள் 3)












மணி ஒலித்தோய்ந்த்து
பனித்தன கண்கள்
காத்திகை 27.


















கலைந்தது மௌனம்
மலர்ந்தன தீபங்கள்
மாவீரர் நாள்.










காந்தள்கள் முகம் சிரித்தது
கைகளில்







கார்த்திகைத் தீபம்.




கோபுரங்கள் இல்லையெனினும் கோயில்கள்
கல்லறைத் தெய்வங்கள்
துயிலுமில்லங்கள்.














எதிரி கிளரியெறிந்ததால்
மனதில் கிளர்ந்தெழுந்தது
மாவீரர் தியாகங்கள்.

வல்வையூரான்