ஒப்பாரி ஓலத்திலும்
சிரித்தபடி இருந்தன
பிணத்தில் இருந்த மாலைகள்.
குளமெங்கும் நிறைத்து பூத்திருந்தாலும்
யாரும் பறிக்கவில்லை
அது ஆகாயத்'தாமரை'.
திருடிக்கொண்டதால்
அகப்பட்டு ஆயுள்கைதியானான்
இதயத்திருடன்.
கொடும் விஷம் கொண்டவைதான்
சர்ப்பங்கள் இல்லை
சனத்துள் இருக்கும் சாதிகள்
கோட்டைகளிலும் ஏற்றப்பட்டன
மண்ணெண்ணெய் விளக்குகள்
எங்குமில்லை மின்சாரம்.
வாலிக்கு வலி வரிகள்
வெண் தாடி ஒன்று
கண் மூடிக் கொண்டது
வேதனை மிகுத்ததே
குங்குமப் போட்டு ஒன்று
சங்கமமாகுது எங்களின் மனங்களில் இன்று
(18.07.2013 எழுதியது.)
வல்வையூரான்.
| Tweet | |||||







