சனி, 13 ஜூலை, 2013

பிரச்சனைத் தீர்வு.


பல்வேறு எண்ணங்கள்
பல நூறு பிரச்சனைகள்
மண்டையில நிண்டு குடையும்


குடைகின்ற பிரச்சனைகளை
குவித்தொரு பக்கம் வைத்து
குழப்பத்திலிருந்து மீள நினைக்கும் மனசு

மனசது நினைத்துவிட்டால்
மாளுமோ பிரச்சனை
அண்டை அக்கம் அரட்டும் வாய்

வாயரற்றியதால் வலுக்கொள்ளும்
வழுக்கிபோகவிருந்த பிரச்சனைகளும்
வம்பு சண்டைகளுக்கும் வழிவிட்டு நிக்கும்

நிக்கின்றவரிடமெல்லாம் அரற்றி
நிம்மதியை நிலையாய்த்தொலைத்து
நீ கண்ட பலன் தான் என்ன?

என்ன கஷ்டங்கள்
என்ன துன்பங்கள் வந்தாலும்
ஒரு கண நேரமொதுக்கு அதற்கு

அதற்கான நேரத்தில்
அமைதியாய் சிந்தனை செய்
நெற்றிக்கண்ணாய் அகக்கண் திறக்கும்

திறந்த சிந்தனை
தெளிவாய் சொல்லும் தீர்வு
திடமாக நம்பு! தீர்வுகளை வெல்லு!!

வென்றபின் பார்
வெற்றிடமனது நிரம்பியிருக்கும்
நிரம்பிய சந்தோசத்தோடு நிம்மதியாயிரு

வல்வையூரான்.