வியாழன், 31 அக்டோபர், 2013

ஹைகூக்கள் 23.



பொருமி தவித்தன ஏதிலியாகா ஏதிலிகள்
சாவகாசமாக செருமிக்கொண்டிருக்கிறது
சர்வதேசம்



எட்டி எட்டி பறிக்கின்றாள் கனியை
எட்டவில்லை
ஏங்கியது கன்னிக்காய் மனது.



கொடுத்துக்கொண்டிருக்கிறேன்
தீரவில்லை திகட்டவில்லை
முத்தங்கள். 



வைக்கோல் கன்று காட்டி ஏமாற்றிய பால்க்காரனுக்கு
நிஜக் குழந்தை காட்டப்பட்டது
சிக்னல் பிச்சைக்காரி.



பிடியின் வழி
வளைந்து வளர்கின்றன 
பானைகளும் குழந்தைகளும்.



பிடித்தபடி வளர்ந்தது பானை
வளரவில்லை 
அவர்தம் வாழ்க்கை.



கிளறுகின்றது கோழி
குப்பையோடு 
குடலையும் - பசி



மனிதாபிமானம் அற்றவர்களெனப்பட்டவர்களுக்கு(???!!!)
மனிதாபிமானம் உள்ளவர்களெனப்பட்டவர்கள்(???!!!)
வழங்குவது மரணம்!!!.



இடைவிடாத அடை மழை
சுகமாக தூங்குகிறது
என் அடுப்பில் பூனை.



கொட்டும் மழை
தூக்கம் தொலைத்த குழந்தை
ஏக்கம் தரும் கட்டில்...



வென்றவர்களென்றவர்கள்
வீழ்ந்தார்கள், வென்றார்கள் 
வீழ்ந்தவர்கள் - இலங்கை தேர்தல் முடிவு

வல்வையூரான்.