திங்கள், 19 நவம்பர், 2012

ஹைக்கூக்கள் 2




அப்பல்லோ இல்லை
சந்திரனையும் கடந்து
காதலர்கள்.




இணைபிரியா தோழன்
ஏழைக்கு
பசி














சும்மா இருந்தாலும்
இருக்க முடிவதில்லை
இணையம்.


கடவுளும் பயந்தான்
கொடுப்பதற்கு
கடன்



நாற்று நடுகையில்
நனைந்தது
மனசு


இடைவிட்டு இறங்கத்துடித்தன 
காற்சட்டைகள்
வாலிபவயசு 














சிதறின சில்லறைகள்
இறந்தவன்
பிச்சைக்காரன் 

வல்வையூரான்.