பசித்ததால் திருடி
புசித்தான் நஞ்சை
வறுமை.
அவன் கொடுத்த ரோஜாவை திருப்பி எறிந்ததால்
ரோஜாக்கொத்துக்கள் அவன்காலடியில்
கல்லறையில் அவன்.
கல்லூரி வாசலில் காற்றடித்தது
பறந்தன ஆடைகள்
இறந்தன இளசுகள் மனசு.
சிலர் சிரிக்காததை நினைத்து
சிரித்த அவன்
பைத்தியக்காரன்.
தினமும் உன்னங்கங்கள் தழுவுவதால்
என்னை நான் இழக்கிறேன்
நுரையாய் - சவர்க்காரம்.
வல்வையூரான்.
| Tweet | |||||





