புதன், 14 நவம்பர், 2012

ஹைக்கூக்கள் 1



கிழிக்கப்பட்டன உடைகள்
மாறியது
நாகரீகம் 




இறைவனும் தேடினான்
ஆலயத்தில்
இறைவனை 


நிரந்தர வீடு
ஏகாந்தத்திற்கு
மயானம்



ஆயுள் கைதி
விலங்குகலில்லை
திருமணம் 


புடவை கசங்கியது
தொட்டிலில்
குழந்தை 






பற்றவைக்கப்படாமலே
பற்றியது
வதந்'தீ' 



விருப்பமில்லாமல் அளிக்கப்பட்டது
தேர்தலில்
விருப்புவாக்கு 






வாயில் ரத்தச்சகதி
கையில்
வெற்றிலைச்சரை 


விழியோரம் நீர் வந்தது
வேதனை அல்ல,
வெங்காயம்.