திங்கள், 31 டிசம்பர், 2012

புதுவருடம்



விடை ஒன்று கொடுத்து 
புதியதை வரவேற்று
விண்ணுக்கும் மண்ணுக்கும் 
துள்ளினர் ஒருபால்


வித விதமாக,
விழிகளை உயத்த வைத்த
விலை கொண்ட 
ஆடையர் ஒருபால்

கடிகார முள்ளை
கன நேரமுற்று
காத்திருந்து கையிலிருந்த
வெடிதனை வெடித்தோர் ஒருபால்




பெடிகளாய் நின்று
கும்மி குத்தி
பெண்கள் பக்கம் திரும்பி
இளித்தவர் ஒருபால்

கைகள் வலிக்க வலிக்க
கஷ்டம் பார்க்காமல்
கனகதியில் SMS
அனுப்பினர் ஒருபால்

லட்டு ஜிலேபி என்று
பட்சணங்கள் உண்டு
பக்கத்துக்கு வீட்டுக்கு தந்து
பறை சாற்றியோர் ஒருபால்




பீர் ஒரு கையில்
பிகர் ஒரு கையில் என்று
பின்விளைவுகள் அறியாது
சுத்தினர் ஒருபால்.

தேரடி வீதியிலும்
திரும்பிய திசைகளிலும் 
சந்தோசம் கொப்பளிக்க
இருந்தனர் இவர்கள்

ஊரது ஒதுங்கிய இடத்தில்
ஒலைக்குடிசைக்குள்ளே 
ஒன்றிலும் லயிக்காது 
ஒதுங்கி இருந்தவன் ஏழை.




வல்வையூரான்.