வியாழன், 17 அக்டோபர், 2013

புரியாத புரிதல்.


புரிதல்கள் இரண்டு
தமக்குள்
சந்தித்துக்கொண்டன

தமக்குள் புரிந்துணர்வில்லாமலே
பேசிக்கொள்ள ஆரம்பித்ததன
புரிதல்கள்;
புரிதல் பற்றியே

புரிதல்கள் பற்றிய
சர்ச்சை
புரிதல்கள் இல்லாததால்
புரிதல்களுக்குள்
முற்றிக்கொண்டிருந்தது

ஒரு புரிதல்
தன் பங்குக்கு
புரிதல் பற்றிய தன்
விளக்கத்தினை
பல்வேறுவகையில்
புரியவைக்க முயற்சித்தது
இன்னொரு புரிதலிடம்

கொஞ்சமும் புரிந்துகொள்ள
முடியாத இரண்டாம் புரிதல்
முதலாம் புரிதலின்
புரிதல் பற்றிய கொள்கைகளை
புரிதல் இல்லாமலே
விமர்சித்துக் கொண்டது.

இந்த முறை
புதிய கொள்கைகளோடு
இரண்டாம் புரிதல்
தன் பங்குக்கு ஆரம்பித்தது.

முதலாம் புரிதலின்
புரிதல் பற்றிய
கொள்கைகள்
எப்படி இரண்டாம் புரிதலுக்கு
புரியவில்லையோ
அப்படியே இப்போது
முதலாம் புரிதலுக்கும்
ஏதும் புரியவில்லை

புரியாத புரிதல்கள்;
புரிந்துகொள்ள முயற்சிக்காத புரிதல்கள்;
புரிதல் என்பதன் உண்மையைப்
புரியாத புரிதல்கள்;
தமக்குள்ள  மீண்டும்
சர்ச்சையை வலுப்படுத்திக்கொண்டன
புரிதல் பற்றியதாகவே
எங்கள் தமிழ் கூத்த(ட்ட)மைப்பைப் போலவே
புரியாத புரிதல்களுடன்.

வல்வையூரான்.