செவ்வாய், 19 மார்ச், 2013

அகிம்சை.


ஒரு சில தசாப்தங்களுக்கு
முதல் வரை
அகிம்சை என்றால்
காந்தி என்றனர்.
அதனையே உலகும்
காந்தியம் என்றது.
காந்தி நாடு என்று
பாரதத்தை கொண்டாடியது.




உண்மை அகிம்சை
எது என்று
உலகுக்கு சொல்லி
பாரதத்தின் முகமூடி
கிழித்தான் பார்த்தீபன்



பாரதம் பார்த்திருக்க
பசியில் பிள்ளை நீர்த்து
பன்னிரண்டாம் நாள்
வீர சுவர்க்கம் சென்றான்
அகிம்சை தீயை
உலகில் ஏற்றிய
தீபச் சுடர் திலீபன்.



பௌத்தத்தை
அகிம்சை மதமென்றனர்
மதங்கொண்ட பௌத்தர்
மனட்சாட்சி இல்லாமல்
கொலைக்காட்சியை
உலகிற்கு காட்டினர்
முள்ளிவாய்க்களில்



அந்த ஆ.. கிம்சையாளருக்கு
அரவனைப்பு கொடுத்தது
கிம்சையாளர் ஆளும் ஹிந்தியா



தமிழன் என்ற உணர்வு
தலை தூக்கிய பொழுதெல்லாம்
தரங்கெட்ட தலைமைகள் - அதை 
தகர்த்தெறிய தலைப்பட்டன.



மறத்தமிழர் எழுந்தனர்
மாணவராய்ப் பொங்கினர்
புறப்பட்டனர் புதுவழியில்
பட்டினி ஆயுதத்தை
பலமாய் பிடித்தனர் 



முன்னவன் காட்டிய பாதையில்
முழுதாய் குதித்தனர்
மூண்டது தீ 
முழு நாடும் பரவியது.



அடக்கத்தான் பார்த்தனர் சிலர் -அவர்களை 
அடக்கி வைத்தனர் இவர்கள் 
தம்மைத் தொடருங்கள்
என்றனர் சிலர்
வாருங்கள் எம் பின்னே 
என்றனர் இவர்கள்
அரசியல் சாயத்தை 
அள்ளி வந்தனர் சிலர்
அங்கேயே நில்லுங்கள் 
என்றனர் இவர்கள் 



இவர்கள் உங்கள் பிள்ளைகள்
இவர்களுக்கு புரிந்தது - ஏன்
உங்களுக்கு மட்டும் புரியவில்லை
இணைத்திடுங்கள் - உங்கள்
கைகளை இவர்களோடு
கொடுத்திடுங்கள் - உங்கள்
ஆதரவை இவர்களுக்கு



இணைப்பினால் 
இனிதாய் ஒரு
நாடு பிறக்கும்.




வல்வையூரான்.

செவ்வாய், 12 மார்ச், 2013

அழகு

ஏழு வயதுகள் மட்டுமே நிறைந்த 3ம் தரம் படிக்கும்  என் மகனின் முதல் கவிதை. அழகு என்ற தலைப்பில். (இந்தியா திருச்சியில் இருந்து மகளீர் தினத்தில எழுதியது.)



அழகு.

நீல வானம் அழகு - அதில்
பறக்கும் குருவிகள் அழகு
பச்சைப்பசேல் மரங்கள் அழகு- அதில்
மலரும் மலர்கள் அழகு

உயர்ந்த மலைகள் அழகு -அதில்
வளரும் தேயிலை அழகு
நீண்ட கடல் அழகு - அதில்
விளையும் முத்து அழகு

பூக்களின் இதழ்கள் அழகு - அதில்
தேனுறிஞ்சும் தேனீ அழகு
பச்சை புல்வெளி அழகு - அதில்
மேயும் பசு அழகு


மு.ஷதுர்ஜன்.(குட்டி வல்வையூரான் )

புதன், 6 மார்ச், 2013

ஹைக்கூக்கள் 9




இலங்கையில் தமிழர்களுமேற்றினர் சுதந்திரதினக் கொடி
அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது
கொடி ஏற்றாதிருக்கும் சுதந்திரம் கூட.



கடைகளில் நீட்டும் போதெல்லாம் நிறைவாயிருந்தது
மீள நிறைக்கையில் நிலைகுலைத்தது
கடனட்டை


தீயாக பரவவேண்டும்
உலகமெங்கும்
அமை'தீ'


நீ ஓடிக்கொண்டிருப்பதால்
கடந்து போகிறது
எல்லாம் - காலம்.


அதர்மமழித்து தர்மம்காக்க
ஆதி முத்து அமர்ந்தாள் தேர்
மாத்தளை பஞ்சரதபவனி.


மண் காக்க வந்தவள்
மலை மாத்தளையிலமர்ந்தவள்
மனமே காண் தேர்.


திங்கள், 4 மார்ச், 2013

கருணை.


பலமுறை அவளைப்
பார்த்ததால் எனக்கு
உண்டானது
அவள் மேல் காதல்

அவளிடம் கேட்டேன்
என்னை காதல் செய் என்று
அவள் என் கன்னம் மீது
மிதியடி தந்தாள்

இம்சை காதலால்
உழன்று நான்
இறைவனிடம் கேட்டேன்
எனக்கு கருணை செய் என்று

அவன் தந்த கருணை
மரணம்
மகிழ்வோடு அவனடி
சரணம்.
வல்வையூரான்.