புதன், 20 ஜூன், 2012

இலட்சியக்கனவு

அகிலனும் குமுதனும் நண்பர்கள். குமுதன் சொந்த இடம் வவுனியா. அகிலனின் சொந்த இடம் கொடிகாமம். கடந்த இரண்டு வருடங்களாக அகிலன் தன் குடும்பத்தினருடன் வவுனியா சென்று வசித்து வருகிறான். 1996 இல் இடம் பெற்ற யாழ் இடப்பெயர்வுடன் கொடிகாமத்தில் இருந்து ஆறு வயது நிரம்பிய பையனாக வன்னிக்கு பெற்றோர்களுடன் இடம் பெயர்ந்திருந்தான். அகிலன் வன்னியில் தருமபுரத்தில் இருந்து இப்போது வவுனியா! இலங்கைத் தமிழன் என்றாலே இடப்பெயர்வு குடிப்பெயர்வு என்பது சர்வசாதரனமான விடையமகிப்போனதே. சிறு வயதில் அகிலன் தருமபுரத்தில் பாலர் கல்வியை ஆரம்பித்தான். சிறு வயதிலேயே கல்வியில் அதிக நாட்டம் இருந்தது. கல்வியில் மட்டுமல்ல விளையாட்டுகளிலும் அதிக நாட்டம் தான். இந்த கல்வி விளையடுகளில் அவனை ஊக்கம் கொடுத்து அவன் வீட்டில் வெற்றி கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வாங்கி அடுக்குவதற்கு மூல காரணகர்தாவே அவன் தந்தை சிவகடாச்சம் தான். சிறு வயதிலேயே காலை 5. 00௦௦ மணிக்கு அவனை நித்திரையால் எழுப்புவர் அவர்.

     “அவன் சின்னப்பிள்ளை அவனை ஏன் இவ்வளவு வெள்ளன எழுப்புறியல் “

என்பாள் அவன் அம்மா மங்கை என்னும் மங்கையற்கரசி.

     “நீ சும்மா இரு இப்ப எழுப்பினால் தான் படிச்சுட்டு கொஞ்சம் எக்சசைசும் செய்யலாம்..... தம்பி..... அகில்..... அகில்..... எழும்பன..... அம்மா முட்டைகோப்பி வைச்சிருக்கா எழும்பி முகத்தை அலம்பிட்டு குடிங்கோ..... ராசா படிக்கோனுமல்லோ..... அப்பா சொல்றது கேக்குதோ.....”

அன்பாக மெதுவாக முட்டைக்கோபியை அடிப்பித்து வைத்து கொண்டு அவனை எழுப்புவார். எழும்புவதற்கு சோம்பலாக இருந்தாலும் அவரின் அன்புக்கு கட்டுப்பட்டு எழும்புவான் அகிலன். காலை கடன்களை முடித்து சுடச்சுட அவன் தாய் தரும் கோப்பியை ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டு அவன் படிப்தற்கு வந்தமர காலை 5. 15 ஆகி இருக்கும். 6. ௦௦00 மணி வரை படிப்பான் குப்பி விளக்கின் ஒளியில். 6. 00௦௦ மணிக்கு சரியாக அவனது தந்தை மீண்டும் வந்து அவனை ஓடுவதற்கு அழைத்து செல்வார். அவன் வாசித்த கொட்டிலுக்கு முன்னால் இருந்த மணல் வீதியில் தந்தையும் மகனும் மெதுவாக ஓடுவர். ஓடி திரும்பியதும் அவனுக்கு சிறிது நேரம் உடற்ப்பயிற்சி சொல்லி கொடுப்பார் சிவகடாச்சம். இவை எல்லாம் முடிகின்ற போது நேரம் அனேகமாக ஏழை எட்டிகொண்டிருகும். ஓர் கால் மணி நேர இடைவேளையின் பின் தந்தையும் மகனும் குளிக்கச்செல்வர். அகிலனுக்கு அப்பாவுடன் குளிப்பது என்றால் கொள்ளை பிரியம். குளித்து வரவும் தாய் சுடச்சுட காலை சிற்றுண்டியை இருவருக்கும் பரிமாறுவார். காலையில் தாயின் முகத்தை பார்த்த படியே சாப்பாட்டை சாப்பிட்டு முடிப்பான் அகிலன். கலையில் தாயின் முகத்தில் தெய்வீக கலை தெரிவதாக அடிக்கடி கூறுவான் அகிலன். உண்மை தான் இவன் படிக்க ஆரம்பித்ததுமே தாய் சென்று குளித்து விட்டு சாமி படங்களுக்கு பூ கொய்து வந்து வைத்து விளக்கேற்றி விடுவாள். நெற்றி நிறைய விபூதியும் நடுவில் குங்குமப்பொட்டும் வைத்து இருக்கும் மங்கையை காலையில் யார் பார்த்தாலும்.... அவ்வளவு லஷ்மிகரமாக இருப்பாள் மங்கை.

அன்பான தாய் தந்தையால் வளர்க்கப்படும் எந்தக் குழந்தையின் மனமும் உடலும் எப்பொழுதும் உற்சாகமாகவே இருக்கும். அகிலனுக்கும் எந்த குறையுமில்லை. எனவே அவன் கல்வியிலும் விளையாட்டிலும் முதலிடத்தில் இருப்பது அதிசயம் இல்லையே! அத்தோடு அகிலன் வேறு ஒரு பிள்ளை சிவம் மங்கை தம்பதியினருக்கு. எனவே தாய் தந்தை அவனுக்கு கேட்டதெல்லாம்...... இல்லை இல்லை கேட்காமலே எல்லாம் செய்தனர். அதே போல் அவனும் அவர்கள் பெயரை மங்க விடாதே வாழ்ந்து வந்தான்.

வகுப்பில் முதலாம் பிள்ளையாக வந்தான். பாடசாலை மட்டம், வலய மட்டம், மாவட்ட மட்டம் என பல பரிசுகளை படிப்பிலும் விளையாட்டிலும் பெற்று வந்தான். எல்லாம் ஒரு குறித்த வயது வரைதான். அவனுக்கு பதினான்கு வயது நடக்கும் போது கடைக்குப்போன அவன் தந்தை அங்கு இராணுவத்தினரின் குண்டு வீச்சு விமானங்கள் நடாத்திய மிலேச்ச தனமான குண்டு வீச்சில் அகப்பட்டு மாண்டு போனார்.

அவனுக்கு”ஹீரோவாக” இருந்த அவன் தந்தையின் இழப்பு அவனை மிகவும் பாதித்தது. அவனை மட்டுமில்லை, அவன் தாயையும் பாதித்தது. அகிலனின் படிப்பு மெல்ல மெல்ல மங்கியது. ஆனால் விளையாட்டில் மட்டும் சிறிதளவு ஆர்வம் காட்டினான்.

காலச்சக்கரம் யாருக்காகவும் தான் சுழற்சியை நிறுத்தி வைப்பதிலையே! அது தொடர்ந்து சுழன்றது. அகிலன் தான் தாயுடன் பல இன்னல்களை அனுபவித்தான். நாட்டுச்சூழல் வேறு அவர்களை துரத்தியது. தொடர் இடப்பெயர்வுகள், பற்பல இழப்புகள்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வவுனியா வந்து சேர்ந்தனர், அகிலும் அவனது தாய் மங்கையும். வவுனியா வந்து அங்கு தெரிந்தவர்கள் வீட்டில் இருந்து கொண்டு அகிலன் தான் படிப்பை தொடர்ந்தான்.

அவனுக்கு பள்ளியில் கிடைத்த தோழன் தான் குமுதன். குமுதனுக்கு விளையாட்டு என்றால் உயிர். அவன் பெரிதாக படிப்பில் ஒன்றும் சாதிக்கவில்லை, என்றாலும் விளையாட்டு போட்டிகளில் அவன் பெற்ற கோப்பைகள் எத்தனை, கேடையங்கள் எத்தனை, பதக்கங்கள் என்ன, சான்றிதல்கள் என்ன அப்பப்பா!!! புதிய பாடசாலையில் விளையாட்டின் சாம்பியனாக இருந்த குமுதனை கண்டவுடனேயே அகிலனுக்கு பிடித்துவிட்டது.

இருவருக்கும் பொது பொழுது போக்கு விளையாட்டு. இருவரும் பாடசாலை வெளியே ஒரே விளையாட்டு கழகத்திற்கு விளையாடுகின்றனர் கால்பந்து. கழகத்தின் பந்து காப்பாளனாக அகிலனும் முன்னிலை வீரனாக குமுதனும் விளையாடுகின்றனர். உயர் தர பரீட்சை முடிந்ததும் இருவரும் முழு முச்சாக விளையாட்டு பயிற்சியிலே காலம் கழித்தனர்.

ஒரு நாள் காலை முற்றத்தில் அமர்ந்து தாய்க்கு தான் முதல் நாள் விளையாடிய ஆட்டத்தை வர்ணனை செய்து கொண்டிருந்தான் குமுதன். அங்கே அப்பொழுது வந்த அகிலன்

     “என்ன மச்சான் அம்மாவுக்கு எதோ பிரசங்கம் செய்றாய்....”

கேட்ட படியே உள்ளே நுழைந்தான்.

     “இல்லடா நேற்றையான் மச்சப் பற்றி தான் சொல்லி கொண்டு இருக்குறேன். நீ என்ன திடீரெண்டு இந்த பக்கம் வந்திருக்க....?”

     “இல்லைடா எங்கட சொந்தக்காரர் ஊரில ஆரோ செத்திடினமாம். அம்மா ஊருக்கு போக வேணுமெண்டவா. நானும் சொந்த ஊர பார்த்தது இல்லை தானே? அங்க எங்கட வீடு இருக்காம்... இதோட ஒருக்க போய் பார்த்துட்டு வரலாம் எண்டுதான்... உன்னட்ட சொல்லாம போனால் நீ கத்துவாய்... அது தான்...”

     “என்ன யாழ்ப்பாணம் கொடிகாமத்துக்கு போறியோ! நானும் யாழ்ப்பாணம் பார்த்ததில்லை. நானும் உங்களோடு வரட்டே?...”
ஆர்வமாக கேட்டன் .குமுதன்

     “நீ வாரதப்பத்தி ஒண்டுமில்லை... உண்ட அம்மாட்ட நீ முதலில பெர்மிசன் எடுகோனும்....”

என்றவனை இடைமறித்தபடி வந்தாள் குமுதனின் தாய் கையில் அகிலனுக்கு தேனீரோடு

     “என்ன யாழ்ப்பாணத்துக்கு தானே? வடிவா போட்டு வாங்கோ... ஏன் அகில் உங்கட அம்மாவும் வாரா தானே... பிறகென்ன...”

என்று தன் சம்மதத்தை தந்தார் குமுதனின் தாய். நண்பர்களின் மகிழ்சிக்கு எல்லை கடந்தது.

உற்சாகமாக பயண ஏற்பாடுகளை செய்தனர். ஒரு வாரம் யாழில் தங்குவதற்கு முடிவு. அன்று மாலையே வவுனியாவில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டனர் அகிலனும், குமுதனும், மங்கையும்.
இரவு யாழ் சென்று சேர்ந்த அவர்கள், மறு நாள் மரண வீட்டிற்கு சென்றனர். அதற்கு அடுத்த நாள் கொடிகாமத்தில் அகிலன் குடும்பத்தினற்கு சொந்தமான தென்னக்கணியை பார்க்க சென்றனர்.

நீண்ட காலம் பராமரிக்க சரியானவர்கள் இல்லாததால் காணி சிதிலமடைந்து காணப்பட்டது. ஆனால் மரங்களுக்கு மட்டும் ஒற்றையடி பாதை காணப்பட்டது. யாரோ களவாக தேங்காய் பிடிங்கியவர்கள் அந்த பாதையை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

நண்பர்கள் இருவரும் ஒருவர் மரத்தில் ஏறி இளநீர் பறித்து போட்டு இறங்கி வர இருவரும் ஆசை தீர இளநீர் பருகினர். பின்னர் இளநீர் கோம்பையினால் ஒருவருக்கொருவர் செல்லமாக துரத்தி அடித்தனர்.
அகிலன் அங்கிருந்த சிறிய பற்றைகளை பாய்ந்து கடந்து ஓட குமுதன் அவனை துரத்தினான்.

     “படார்....”

என பலமான ஓசை தொடர்ந்து,

     “ஐயோ அம்மா...”

அலறிய படி கிழே விழுந்தான் குமுதன். நீண்ட காலமாக மண்ணில் புதைந்து விழித்திருந்த ஓர் நிலக்கண்ணி தான் வேலையை காட்டி இருந்தது. குமுதனின் அலறல் கேட்டு ஓடி வந்தான் அமுதன். மீண்டும்
 
     “படார்...”

     “ஐயோ.... அம்மா.... ஐயோ....”

இப்பொது அகிலன், அந்த காணியில் இருந்த இன்னுமொரு கண்ணிவெடி தன் வேலையை காட்டி இருந்தது. விழுந்த அகிலன் கையில் ஓர் வெளிறிய மட்டை தட்டுப்பட்டது. எடுத்துப் பார்த்தான் அதில் ‘மிதி வெடி அபாயம்’ என காணப்பட்டது.

கால்பந்தில் தேசிய ரீதியில் பிரகாசிக்க வேண்டும் என்ற இலச்சிய கனவுடன் இருந்த இவர்களுக்கு கால்களே இல்லையே..... என்ன செய்வது இறைவா? 

 வல்வையூரான்




ஞாயிறு, 27 மே, 2012

மழை காட்டும் ஒற்றுமை தமிழா





கடல் கொண்ட நீரை
கவர வந்த கள்வன்
கரு கொண்ட மேகம்


பெரு மேகம் தங்கள்
பேதைமை மறந்து இணைந்து
பெய்வது தான் பெருமழை

மேகத்துடன் மேகம் இணைந்து
மேலான ஒற்றுமை கொண்டதால்
மேதினி பெறுவது தான் மழை

சிறு சிறு துளிகள் எல்லாம்
சிதறாமல் சேர்வது தான்
சினம் கொண்ட பெரு வெள்ளம்

வரும் வெள்ளம் கண்டால்
வழி எல்லாம் உள்ள
வனமெல்லாம் என்னாகும்

எல்லாமே எதனால் சாத்தியமாயிற்று
ஏதமில் ஒற்றுமை தான்
என்பதை உணரு தமிழா

ஒற்றுமை ஒன்று இருந்தால்
ஒன்றாய் நாங்கள் நின்றால்
ஓர் நாடென்ன ஒருலகமைகலாம்

நாட்டில் ஒன்றாய் இருந்தோம்
நாலாய் பிரிந்தோம் - நாய்கள்
நம்மில் நஞ்சை கலந்தன

நீயா நானா எனும்
நீதியிலாப் பேதைமை கொண்டோம்
நிறையவே அமைப்புகள் ஆனோம்

ஆகிய எம் பிரிவுகளாலே
அரசியலிலும் அகதிகள் ஆனோம்
அதிசயந்தானோ இதுவும் அசிங்கம் தான்

நீர்த்துளிகள் அவற்றுள் ஒற்றுமையாலே
நிலையான வனமழிக்க முடியுமானால்
நினைத்துப்பார் தமிழா உன்னால்

ஒன்றாகு தமிழா உனக்குள்
ஒற்றுமையாய் சேர் நன்றே
ஒரு நாடு செய்யலாம் இன்றே


வல்வையூரான்

மழை காட்டும் ஒற்றுமை தமிழா



கடல் கொண்ட நீரை
கவர வந்த கள்வன்
கரு கொண்ட மேகம்

பெரு மேகம் தங்கள்
பேதைமை மறந்து இணைந்து
பெய்வது தான் பெருமழை

மேகத்துடன் மேகம் இணைந்து
மேலான ஒற்றுமை கொண்டதால்
மேதினி பெறுவது தான் மழை

சிறு சிறு துளிகள் எல்லாம்
சிதறாமல் சேர்வது தான்
சினம் கொண்ட பெரு வெள்ளம்

வரும் வெள்ளம் கண்டால்
வழி எல்லாம் உள்ள
வனமெல்லாம் என்னாகும்

எல்லாமே எதனால் சாத்தியமாயிற்று
ஏதமில் ஒற்றுமை தான்
என்பதை உணரு தமிழா

ஒற்றுமை ஒன்று இருந்தால்
ஒன்றாய் நாங்கள் நின்றால்
ஓர் நாடென்ன ஒருலகமைகலாம்

நாட்டில் ஒன்றாய் இருந்தோம்
நாலாய் பிரிந்தோம் - நாய்கள்
நம்மில் நஞ்சை கலந்தன

நீயா நானா எனும்
நீதியிலாப் பேதைமை கொண்டோம்
நிறையவே அமைப்புகள் ஆனோம்

ஆகிய எம் பிரிவுகளாலே
அரசியலிலும் அகதிகள் ஆனோம்
அதிசயந்தானோ இதுவும் அசிங்கம் தான்

நீர்த்துளிகள் அவற்றுள் ஒற்றுமையாலே
நிலையான வனமழிக்க முடியுமானால்
நினைத்துப்பார் தமிழா உன்னால்

ஒன்றாகு தமிழா உனக்குள்
ஒற்றுமையாய் சேர் நன்றே
ஒரு நாடு செய்யலாம் இன்றே
வல்வையூரான்




ஞாயிறு, 20 மே, 2012

மௌனம் பேசியது.


மெதுவாக கண்களைத் திறக்க முயற்சி செய்தாள் அமுதா. தலை விண் விண் என வலித்தது. காலில் வேறு பாரமாக உணர்ந்தாள். 'அட அது .... அம்மாவா?...' நீராவி படிந்த கண்ணாடியூடு பார்ப்பது போல் பார்வை தெளிவற்றிருந்தது. 

இரண்டு மூன்று முறை கண்களை மூடித் திறந்தாள் அமுதா. இப்போது பார்வை சற்று தெளிவாக இருந்தது. வலியும் அதிகமாக தெரிந்தது.


" அம்... மா... " 

வேதனையில் முனகினாள் அமுதா.

" பிள்ள நான் நிக்கிறன் நீ படு... "

ஆறுதலாக தடவினாள் லலிதா, அமுதாவின் தாய். மெதுவாக மீண்டும் கண்களை மூடினாள் அமுதா. அவள் நினைவுகள் எங்கோ பறந்தது. வலி தெரியாமல் இருக்க அந்த நினைவுகளில் மனதை வலிந்து புகுத்தினாள் அமுதா.

கனகசபை லலிதராணி தம்பதியினருக்கு இரு பிள்ளைகள். ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று. மூத்தவன் கமலசபேசன் இளையவள் அமுதராணி. தங்கள் பெயர்களின் பகுதிகளை பிள்ளைகளின் பெயர்களில் ஒட்டவைத்து பெயர் சூட்டி இருந்தார் கனகர். பிள்ளைகள் இருவரும் பெற்றவர்களைப் போலவே அழகு. அதிலும் அமுதா மிக மிக அழகானவள்.

கமலன் தன் பதினெட்டு வயதில் தன்னை நாட்டுக்காக தந்திருந்தான். இப்போது அமுதாவுக்கு இருபத்து மூன்று வயது. தமயனின் பிரிவு சிறுது காலம் அலைக்கழித்தாலும் காலச் சுழட்சி அவளைப் புடம் போட்டு வாழ்வைப் புரிய வைத்திருந்தது. நிலையற்ற இந்த உலகில் யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பதை உணரும் வயது அவளது.

அவளது வயது அவளுக்கு ஒரு துணையைத் தேடி இருந்தது. அவன் தான் கிருபா.

கிருபா அவள் ஊருக்கு இரண்டு ஊர் தள்ளி உள்ள ஊரில் இருப்பவன். அவனும் நல்ல அழகன். கிருபா ஊரில் தான் தனியார் கல்வி நிலையம் இருந்தது. அதற்குதான் அமுதா படிப்பதற்கு சென்று வந்தாள். கல்வி நிலையம் சென்று வரும்போது கிருபாவைக் கண்டிருக்கிறாள் அமுதா. கிருபாவின் கண்களின் காந்தக் கவர்ச்சியில் மயங்கி அவனை திரும்பி பார்ப்பாள் அமுதா. அதேபோல் அமுதாவின் கன்னத்தில் குழி விழுந்த சிரிப்பும் மற்ற மாணவிகள் மத்தியில் கல கலவென பேசித் சிரித்தபடி சைக்கிள் ஓட்டும் லாவகமும் கிருபாவையும் கவர்ந்திருந்தன. இருவரின் அழகுக் கவர்ச்சி ஒருவருக்கொருவரைப் பிடித்திருந்தாலும் பேசிக் காதலை வெளிப்படுத்த இருவருக்குமே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆணால் ஒருவரை ஒருவர் பார்ப்பதை இருவரும் நிறுத்தவில்லை.

அதற்க்கான காலம் மிக விரைவிலேயே கனிந்து வந்தது. யாழ் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தில் கண்காட்சிக்கு அறிவிப்பு வந்தது. கிருபா அவன் தோழர்களோடு கண்காட்சிக்கு சென்றான். ஒவ்வொரு பகுதியாக பார்த்து வந்தவன் மனித உடற்கூறுகள் வைக்கப்பட்ட பகுதிக்கு வந்து சேர்ந்தான். அப்பகுதி வாசலுக்கு வந்த கிருபாவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதன் வாசலில் அமுத தனியாக நின்றிருந்தாள். ஆச்சரியம் மிகுந்தவனாக சுற்றுமுற்றும் தேடினான் கிருபா அமுதாவின் தோழியரை. யாரையும் காணதவனாக மானின் மிரட்சியுடன் குறுகுறுக்கும் கண்களால் மெதுவாக இவனை ஓரப் பார்வை பாத்தபடி நின்ற  அமுதாவிடம் திரும்பி

" என்ன தனிய நிக்குறீங்கள்? எங்க உங்கட பிரண்ட்ஸ் ஒருத்தரையும் காணேல்ல..."

என்றான்.

" இ... இல்.... இல்ல எல்லாரும் உள்ள போட்டினம். நான் போகேல்ல.."
" ஏன்? "

" உள்ள பொடி எல்லாம் வைச்சிருக்காம். அதான்..."

" ஏன் என்ன பயமோ?.."


என நகைத்தான் கிருபா. பின் தன் நண்பர்கள் பக்கம் திரும்பி

" டேய் நீங்க போங்கோ நான் பின்னால வாரன்.."

என்றான் பொருள் பொதிந்த சிரிப்பொன்றை உதிர்த்தபடி.

" OK டா மச்சான் "

என்றபடி உள்ளே சென்றனர் அவன் நண்பர்கள் அவன் சிரிப்பின் அர்த்தம் புரிந்தவர்களாக. நண்பர்கள் உள்ளே சென்றபின் அமுதாவிடம் திரும்பிய கிருபா

" என்ன பதில காணேல்ல? "
" ஏன் என்ன கேட்டியல்?"
"ஏன் பொடி இருந்த என்ன பயமோ எண்டனான்..."
" அப்ப நீங்களும் போகேல்லையே ... உங்களுக்கும் பயமோ?.."
" இல்ல வேண்டின ஆக்கள் தனிய நிக்கேக்க கைவிட்டுட்டு போகக்கூடாது அதுதான்...."
" ஆர் வேண்டின ஆக்கள்?... ஆருக்கு..?"
"அது அந்த வேண்டப்படவைக்கு தெரியும் தானே..."

என்றபடி சிரிக்க ஆரம்பித்தான் கிருபா. அவன் சிரிப்பில் தானும் கலந்தால் அமுதா.

" அது சரி பிரண்ட்ஸ் எல்லாம் விட்டாச்சு. பிறகு எப்படி அவையளோட சேருவியள் "
கேட்டான் உண்மையான அக்கறையுடன் கிருபா.

     " ஏன் உள்ள போனவையள் இதால தானே திரும்பி வருவினம்?.... "

என புருவத்தை உயர்த்தி வியப்போடு கேட்டால் அமுதா.

     " ஐயோ...  இவ்வளவு நேரம் நிக்கிறியளே... ஆராவது இதால வந்தவையலோ?.... "

கேட்டு நிறுத்தினான் கிருபா. அப்போது தான் அமுதாவுக்கு உரைத்தது, இதுவரை உள்ளே போன எவரும் இந்த வாசலால் வரவில்லை என்பது. ' கடவுளே அவள்களை விட்ட நான் தனிய இப்ப எங்க போய் தேடுவன் ' என நினைத்தபடி கிருபாவிடம் திரும்பி

     " அப்ப அவையள் எல்லாம் வேற வழியால தானோ வெளியால வருவினம்? "
     " ஓம் நீங்க என்னோட வாங்கோ நான் உங்களை உள்ள கூட்டிக்கொண்டு போய் அவையோட சேர்த்து விடுறன்." 

என்றான்.

     " சரி கெதியா வாங்கோ.." 

என்று அவனை அழைத்தபடி உள்ளே செல்லத் தயாரானாள் அமுதா. ' காதலன் அருகிருந்தால் கன்னியருக்கு எப்படித்தான் இவ்வளவு தைரியம் வருகிறதோ...' என வியந்தபடி அவள் கூட உள்ளே நுழைந்தான் கிருபா.

இப்போதெல்லாம் அமுதா வகுப்புகள் முடிந்து அனைவரும் வெளியேறிய பின்னரே தனியாக சைக்கிளைத் தள்ளியபடி வெளியே வருகிறாள். வெளியே வந்ததும் அவள் கண்கள் கிருபாவைத் தேடும். அவளது சைக்கிள் வருவது கண்டதுமே தயாராவான் கிருபா. இருவரும் ஒன்றாக அமுதா ஊர் எல்லை வரை மிக மெதுவாக சைக்கிளை மிதித்தபடி வருவார்கள் தங்களுக்குள் சிரித்து பேசியபடி. பின்னர் கிருபா தன் ஊருக்கு திரும்பி விடுவான். இவ்வாறே இவர்கள் சந்திப்பு தொடர்ந்தது.

அமுதாவின் படிப்புகள் முடிந்ததும் கிருபா அமுதா ஊருக்குள் வந்தே அவனை சந்திக்க வேண்டி இருந்தது. அமுதாவும் கோயிலிக்கு போவதாக சொல்லியும் நண்பிகளை சந்திக்க செல்வதாக சொல்லியும் வீட்டில் இருந்து புறப்பட்டு கிருபாவை சந்தித்தாள். காதலர்கள் சந்தித்தால் தான் நேரம் போவதே தெரியாதே. அடிக்கடி நேரம் பிந்தி வீடு திரும்பினாள் அமுதா.

ஒரு நாள் கோவிலடியில் கிருபாவை சந்தித்து பேசிக்கொண்டிருக்கும் போது அமுதாவின் தோழியின் அப்பா அமுதாவை பார்த்து கனகரிடம் விடயத்தை சொன்னார்.

வீட்டில் வெடித்தது பூகம்பம். என்னதான் காலம் வளர்ந்து சென்றிருந்தாலும் காதல் என்றவுடன் பெற்றவர்கள் பொதுவாகவே அதை எதிர்ப்பது என்பது இன்னமும் எம்மிடையே இருக்கத்தான் செய்கிறது. அதிலும் வேதனையான விடயம் என்னவென்றால் தாங்கள் காதலித்து மணந்திருந்தாலும் கூட தங்கள் குழந்தைகள் காதலிகின்றார்கள் என்றவுடன் அதை எதிர்ப்பது என்பது தான். அமுதாவின் பெற்றோர் என்ன விதி விலக்கா?


சேதி அறிந்ததும் கனகர் வீடு வந்து லலிதாவுடன் பாய்ந்தார். 

     " என்ன பிள்ளை பெத்திருகிரா? அங்க தெருவில நிண்டு ஆரோடையோ கதைச்சு கொண்டு நிக்கிறாளாம்... "

பலமாக வெடித்தார். 

     " என்னப்பா சொல்லுறியள்?... ஆர்?... அமுதாவோ?... நீங்க வேற ஆரையும் பத்திருபியள். எங்கட பெட்டை அப்படி செய்ய மாட்டாள். கோயில் குளம் எண்டு திரியிறவள பத்தி சும்மா கதைக்கதைங்கோ... ஓ... சொல்லிபோட்டன்... "

பதிலுக்கு வெடித்தால் லலிதா. கனகர் விடயத்தை விளக்கியதும் ஆடிப்போனாள் லலிதா.

ஏதும் அறியாமல் வீடு திரும்பிய அமுதாவை தாயும் தந்தையும் சேர்ந்து திட்டி தீர்த்தனர். முதலில் திகைத்த அமுதா விடயம் புரிந்ததும் தான் காதலிப்பதையும் அவனையே திருமணம் செய்ய இருப்பதையும் தாய் தந்தையிடம் தெரிவித்தாள். அவளது முடிவைக் கேட்ட கனகர் அவளை வீட்ட விட்டு வெளியேற விடாது தடுத்ததுடன் அவளுக்கு அவசரம் அவசரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார். அவள் எங்கு சென்றாலும் தானே அவளைக் கூட்டி சென்று வந்தார்.

இவற்றோடு மட்டும் கனகர் நிறுத்தி விடவில்லை. அமுதாவின் காதல் பிரச்சனை அறிந்த மறுநாளே கிருபாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு கிருபாவையும் அவன் தாய் தந்தையையும் வாய்க்கு வந்தபடி வசை பாடினார். கிருபா குடும்பத்தை அவமானப்படுத்துவதே அவர் நோக்கமாக இருந்தது. ஆனாலும் கிருபாவின் தந்தை ஓர் அமைதியான மனிதர். எனவே சண்டை பெரிதாகாமல் போனது, அதில் கூட கனகருக்கு சிறிது வருத்தம் தான்!

கிருபாவின் தந்தை கிருபாவிடம் 

     " தம்பி... அந்த மனிசன் ஒரு பண்பு கேட்ட ஆளா இருக்கார். நீ அவற்ற மகளை மறந்திடு... ஓம் அதான் உனக்கு நல்லது. அதோட உனக்கு நான் சிலாபதில ஒரு பெரிய றால் பாம் கொம்பனில ஒரு மனேஜர் வேலை பாத்திருகிறன். என்ட பிரண்ட் ஒராளால கிடைச்சது. நல்ல சலரி வேற. நீ அங்க போய் இரு தம்பி. அப்ப உனக்கு இது கொஞ்சம் கொஞ்சமா மறந்திடும்..."

என்றார்.

     " அப்பா என்னை மனிச்சுடுங்கோ. என்னால அவளை மறக்க முடியாது. ஆனாலும் வேலைக்கு போறான். அதுக்காக அவளை மறந்துட்டன் எண்டு நினைச்சு எனக்கு இங்க பொம்பிளை தேடுறது... காலியாண அலுவல்கள் பாக்கிறது எண்டு ஏதும் வைச்சுகொள்ளதங்கோ..."

என்று கண்டிப்பாக கூறிவிட்டு சிலாபத்துக்கு சென்றான் வேலைக்காக.

நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகின. லீவுகளுக்கு வரும் கிருபா அமுதாவின் ஊர் பக்கம் தன் நண்பர்களை அனுப்பி உளவு பார்ப்பான். அமுதாவை எங்கும் தனியாக விடுவதாக இல்லை கனகர். சந்திக்க பேச எந்த வாய்ப்புகளும் இல்லை.

காதலில் பிரிவு தரும் வேதனைக்கு இந்த உலகில்... ஏன் எந்த உலகிலும் இணை இருக்க முடியாதே. வேதனைத் தீயில் வெந்து கருகினான் கிருபா. அமுதாவும் தான். காதலர்கள் சேர்ந்திருந்தால் யுகங்கள்  கூட நொடிகளாகும். பிரிந்தால் நொடிகள் கூட யுகங்களாக தெரிகிறதே.


இரு வருடங்களின் பின் சித்திரை வருடப்பிறப்பு விடுமுறை. இரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினான் கிருபா. அவனை அழைத்து செல்ல பஸ் தரிப்பிடத்துக்கு அவன் நண்பர்கள் வந்திருந்தனர். பஸ் அவன் ஊரை நெருங்கிக் கொண்டிருந்தது. எதிரே.... ஆம் அமுதா அவள் அப்பாவுடன் மோட்டர் சைக்கிளில் வந்துகொண்டிருந்தாள். கிருபாவுக்கு சந்தோசம் தாங்கவில்லை. எவ்வளவு காலத்துக்கு பிறகு அவளை நேரே காண்கிறான். நெஞ்சுக்குள் பட்டம் புச்சிகள் கோடி கோடியாக சிறகடித்தன.

கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நிகழ்வுகள் நடந்து முடிந்தன. எதிரே இருந்து வந்த ஒரு ஹையஸ் வான் கன வேகமாக வந்து கனகரின் மோட்டர் சைக்கிளோடு மோதி அவர்கள் இருவரையும் தூக்கி எரிந்தது. அதிர்ந்தான் கிருபா. வேக வேகமாக பஸ்ஸில் இருந்து இரங்கி ஓடினான்.

     " அமுதா...அமுதா... "

கிருபாவின் குரலுக்கு பதில் இல்லை அமுதாவிடம் இருந்து.

     " ஐயோ... அ... ம்... மா...."

ஈனசுரத்தில் முனகினார் கனகர். ஒரு கணம் ஸ்தம்பித்த கிருபா நண்பர்களுடன் கூடி எதிரே வந்த இன்னொரு வானை மறித்து இருவரையும் தூக்கி ஏற்றினான். அமுதாவின் தலையால் இரத்தம் கொட்டிகொண்டிருந்தது. வான் பறந்தது வைத்தியசாலைக்கு.  வைத்தியசாலை சேர்ந்தபோது இருவரும் மயங்கி இருந்தனர். அவசர சிகிட்சை பிரிவில் இருவரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களைப் பரிசோதித்த வைத்தியர் வெளியே வந்து கிருபாவிடம்

     " நீங்க ஆர் தம்பி? அவையளுக்கு சொந்தகாரரோ..? "
     " இல்ல சொந்தம் அகப்போறவன். ஏன் சேர் என்ன ஆச்சு "
     " ரெண்டு பேருக்கும் ரெத்தம் நிறைய போட்டுது... ஆனாலும் சரியான நேரத்தில கொண்டு வந்திருக்கீங்கள். அவர்ர குரூப் ரெத்தம் இருக்கு... ஆனா... அந்த பிள்ளைட ரெத்த குரூப் இங்க எங்களிட இப்ப கையில இல்லை. மத்த ஹோஸ்பிடளுக்கு கேட்டிருக்கன். ஆனா உடன ரெத்தம் வேணும்... கிடைச்சாத்தான் காப்பத முடியும்... ஆராவது ஓபோசிடிவ் ரெத்தம் உள்ளாக்கள் வேணும்..."
     " நான்தாரன்... என்ட ரெத்தத்த செக் பண்ணுங்கோ சேர்.."

கிருபாவின் இரத்தமும்  அமுதாவின் இரத்தமும் பொருந்தி வர ஒரு பைந் இரத்தம் இடம் மாறியது.

மூன்று நாட்களின் பின் இன்றுதான் அமுதா கண் முழித்திருந்தாள். மீண்டும் கண்களை மூடி நினைவுகளில் மிதக்க ஆரம்பித்த அமுதா அம்மா அவசர அவசரமாக எழுந்திருக்க முயற்சித்ததனால் உண்டான சத்தத்தினால் மீண்டும் முழித்தால் அமுதா. சிந்தனை கலைந்தது.
     " வாங்கோ தம்பி... நீங்க ஏனப்பா எழும்பி வந்தியள்..."

அமுதாவுக்கு தான் காண்பது கனவா... நினைவா?.. நம்ப முடியாது இருந்தது. கிருபாவின் தோளில் தாங்கி பிடித்தபடி ஒரு காலில் பலத்த கட்டுடன் நின்றார் கனகர்.

     " இல்லை லலிதா.... பிள்ளை மிழிச்சிட்டலோ எண்டு பாப்பம் எண்டுதான்..."

இழுத்தார் கனகர்.

அமுதாவின் கண்கள் குளமாகின. கிருபவினுடையதும் தான். கனகரை மெதுவாக லலிதாவிடம் விட்டு விட்டு அமுதாவின் கையை மெதுவாகப் பற்றி தன் கைக்குள் அடக்கி கொண்டு அவள் கண்களையே பார்த்தான் கிருபா. அங்கு மௌனம் பேசியது, ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள். வெளியே எங்கோ தூரத்தில் ஒரு ஐஸ்கிரீம் வானில் பாடல் ஒலித்தது.

' கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் ... காதல் என்று அர்த்தம்...'
வல்வையூரான்.