திங்கள், 23 செப்டம்பர், 2013

ஹைக்கூக்கள் 22




பெற்றதாகச் சொல்லப்பட்டாலும்
இன்னும் கிடைக்கவில்லை
யாருக்கும் சுதந்திரம்.



இறக்கையடித்துப் பறந்தது
கூண்டுக்குள் கிளி
சுதந்திரமாய்(...?)


  
மீட்டப்பட்டுக்கொண்டிருந்தது வீணை
தூங்கிக்கொண்டிருந்தது
குழந்தை.



மாறிக்கொண்டன
மாற்றிக்கொண்டனர்
இதய மோதிரங்களை.
 



சேமித்துக்கொண்டிருக்கிறேன்
தூக்கத்தை
வெளிநாட்டு வாழ்க்கை
 



கூண்டுப்பறவைக்கு விடுதலையாம்
திறக்கப்பட்டது கூண்டு
சிறகுகள் வெட்டப்பட்டிருந்தன.



இறக்கை வெட்டிய கிளிக்கு
திறந்து விட்ட கூண்டு
சுதந்திரம்.




பல லட்சங்கள் செலவில்
இலவச கழிவறை
பறவைகளுக்கு சிலைகள்.



 உயிரை உறிஞ்சி குடித்துக்கொண்டிருக்கிறாய்
நிறுத்திக்கொள் விடிகிறது
உன் விளையாட்டு ஊடலை

வல்வையூரான்.    

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

ஹைக்கூக்கள் 21.



துளையிடப்பட்டது புல்லாங்குழல்
வாசித்துக்கொண்டிருந்தவன்
வலியை மறந்தான்.





 வயதானாலும்
வாலிபத்தோடு தொடர்கின்றன
வலிமையான நட்புக்கள்.




புலரும் பொழுதுகள்
வெறுமையாக
அருகில் நீ இல்லை



 

இறுக்கி அணைத்து முத்தமிட்டாய்
வலித்தது எனக்கு
அந்த பூனையாக நான் இல்லையே




சவாரியில் பாய்தன மாடுகள்
இறந்தது
ஜீவகாருண்யம்
 
 
 
காடழித்து பயிரிட்டவர்கள்
காத்திருக்கின்றனர்
மழைக்காக.
 
 
 
  கூட்டத்தில் அலறிக்கொண்டிருந்தது ஒலிபெருக்கி,
பேச்சாளர் பேசிக்கொண்டிருந்தார்
ஒலிமாசு பற்றி




தினமும்
தூங்கிக்கொண்டிருக்கிறேன்
நில(னை)வோடு


வல்வையூரான். 
  

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

வலைப்பதிவர்கள் திருவிழா 2013.



எழுத்தாளர்கள் என்று
ஒரு காலம் இருந்தவர்கள் சிலரே
அந்த முறையகற்றி
வலை வழியாக
வந்த கருத்தெல்லாம் பதிந்து
நிலையாக அதனை
நிமிடதே பகிர்ந்து
நிலையுலகம் சுற்றியோர்
வலைப்பதிவர்கள்.


ஓரோரிடத்தில் நின்றோரை
ஓரிடத்தழைத்து
ஓரண்டுக்கு முன்னே
திருவிழாக் கண்டனர்
அது முதலாம் வலைபதிவர் திருவிழா



இன்று
சிங்காரச் சென்னை தனிலே
சிந்தை மகிழ்ந்தோர் எல்லாம்
சித்தம் குளிர குழுமினர்
ஆடினார் பாடினர்
ஆரவாரம் செய்தே
ஆலிங்கனம் செய்தனர்
இது இரண்டாம் வலைபதிவர் திருவிழா
 
அந்த சந்தோசம்
நேரில் எனக்கில்லை
இருக்கட்டும்
இன்னொரு திருநாளில்
யான் காண்பேன் இன்முகங்களை


இன்றைய தினத்திலும்
இருக்குதாம் ஒரு வழி
தொ(ல்)லை பேசி வழியாக
தொலைவிலிருந்தே
எல்லையில்லா ஆனந்தத்துடன்
உங்கள் எல்லையில் வந்து
உரைக்கின்றேன் வாழ்த்துக்கள் கோடி.

வளமான உங்கள் இல்லை எங்கள் விழா
வான் புகழ் கொண்டு சிறக்கட்டும்

ஒலிக்கட்டும் பதிவர்கள் குரல்
ஓங்கட்டும் பதிவர்கள் புகழ்.


(குறிப்பு: இந்த கவிதை எழுதப்பட்டது கனடா நேரம் இரவு 2.30(01.09.2013). ஆனால் காலை 5.00 மணிவரை ஆர்வத்தோடு காலையில் வேலை இருந்தும் முழித்திருந்து  மூன்று முறை தொடர்புகள் எடுத்தும் அங்கிருந்த சிலருடன் பேச முடிந்ததே அல்லாமல் விழாவில் படிக்க முடியவில்லை என்பது சோகமே...)
வல்வையூரான்.