அகரத்திலும்
முதலாய் நின்றது
அம்மா.
முதலாய் நின்றது
அம்மா.
குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்துகொண்டிருந்தான் அவசரமாக
முடிந்துகொண்டிருந்தது
விவாகரத்து அனுமதித்த வாரத்துக்கான குழந்தை பார்க்கும் நேரம்.
முடிந்துகொண்டிருந்தது
விவாகரத்து அனுமதித்த வாரத்துக்கான குழந்தை பார்க்கும் நேரம்.
பரவுகின்றது ஒளிவெள்ளம்
அடிபட்டுப் போகின்றன
பல இருள்கள்.
அடிபட்டுப் போகின்றன
பல இருள்கள்.
தனித்திருந்தன இரட்டைப்பனை
தொலைத்திருந்தன
தூரதேசத்தில் உறவுகளை.
தொலைத்திருந்தன
தூரதேசத்தில் உறவுகளை.
குடிக்கையில்
குழம்பியது
அவள் மனதே.
குழம்பியது
அவள் மனதே.
பறந்துகொண்டிருந்தது கொடி
விரட்டிக்கொண்டிருந்தது
காற்று.
விரட்டிக்கொண்டிருந்தது
காற்று.
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து
சென்னையில் நடைபெறுகின்ற வலைப்பதிவர்கள் மாநாட்டில் நாங்கள் நேரில் கலந்து கொள்ளவில்லை, முடியவில்லை எனினும் எங்கள் உள்ளங்களால் கலந்து அந்த நிகழ்ச்சி சிறப்புற அமைய வேண்டும் என இந்த பதிவின் வழி வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கின்றோம். சந்தர்ப்பம் அமையும் போது நாங்களும் கலந்து சிறப்பிப்போம்...
நிகழ்ச்சி சகல முறையிலும் சகலரும் சந்தோசப்படும் வகையிலும் அமைய எங்கள் வாழ்த்துக்கள்.
வல்வையூரான்.
| Tweet | |||||















