சனி, 29 ஜூன், 2013

திருமண நாள்.

கடந்த பதினாறாம் தேதி (16.06.2013 ) எங்கள் திருமண நாள். அதையொட்டி எழுதியது... (ஆவணப்படுத்தலுக்காக இங்கே)


ஆனது தேதி பதினாறு
ஆகியது ஆண்டுன்னோடு பாதி பதினாறு


பாதி இங்கே!
மீதி அங்கே!!
ஆதி எங்கே?

நாதியில் தமிழினம்
தேதிகள் எண்ணுவோம்
தினம் மனதில் கூடுவோம்.


 வல்வையூரான்.

சனி, 22 ஜூன், 2013

ஹைக்கூக்கள் 17


 
படபடத்தபடி வானில் பறந்தது
பட்டம் மட்டுமல்ல
விட்டவன் மனதும்.
 


வெட்டப்பட்டபோது அழாதது
மரம் அழவைத்தது
மழை இல்லாதபோது.



தகிக்கும் வெய்யிலும்
குளுகுளு என்று தெரிந்தது
ஏசிஅறையில் இருந்தது ஓவியம்.



சோகத்திலும் சுகத்திலும்
எப்போதும் என்னருகில் - நீயே
வானொலி.


 
அழுதபடி முதல்வகுப்பில் நுழைந்தது குழந்தை
பார்த்து சிரித்துக்கொண்டது
பள்ளியிலிருந்த ஆலமரம்.



மண்ணோடு போராடியபடி வளர்ந்தது விதை
வேகமாக மேய்ந்தது
ஆடு.
வல்வையூரான்.

செவ்வாய், 18 ஜூன், 2013

ஹைக்கூக்கள் 16



மழை கொட்டிக்கொண்டிருக்கிறது
நாளை முற்றத்தில் வரும்
பட்டுப்பூச்சிகளும், பேய்க்காளான்களும்.




 
என்னை திறந்து
முழுதாய் பூட்டியவள்
நீ...



  
கையில் கவளமாய் உண்பது
எங்கள் ஏழ்மையல்ல
உங்கள் அன்பு அம்மா.



  
தேடிக் கண்டுகொண்டேன்
கடவுளையல்ல
போராட்டதுக்கான காரணங்களை.




 முத்தமிட்டதால்
மோதிக்கொண்டன
இதயத்தில் காதல்.




முத்தமிட்டதால்
மோதிக்கொண்டன
இதயத்தில் காதல்.
வல்வையூரான்.

புதன், 12 ஜூன், 2013

ஹைக்கூக்கள் 15


கருவறைதான்
இயற்கைக்கு
மரம் காப்போம்.



பிடித்தவர்கள் அருகிலில்லை
பிடித்தது கை
கைத்தடியை.



 எரித்துவிட்டாய்
எரிவது
நானல்ல நீ.



 
என்னை நீ குடிக்கையில்
உன்னில் நான் குடிக்கும்
ரத்தமும் சிவப்பு.



ஏற்றப்பட்டது விளக்கு
எரிவது
நெருப்பே!




அழைப்பு வந்தது
அடிபட்டது
அலைபேசி மட்டும் சேதமாகவில்லை.
 


 
நான் படித்தவற்றுள்
பெறுமதியானது
நீ.
 
வல்வையூரான்.