செவ்வாய், 28 மே, 2013

ஹைக்கூக்கள் 14





முடிந்து போனது மே 18
முடியாமல்
வழிகிறது கண்ணீர்.




தேடிக்கொண்டிருக்கிறேன்
காரணங்களை
என்னை வெறுப்பதற்கு.




விம்மும் போது
விளங்கியது
விபத்து.




அவன் காதல்
ஆரம்பித்ததும் முடிந்ததும்
'நன்றி'யில்




குளிர்ந்தபோது
தெரிந்தது
உள்ளிருந்து வெப்பம்.




விலையேற்றம்
குறைந்தது
விபச்சாரம்.




மௌனங்கள் போசிக்கொண்டன
அழுதது
குழந்தை.




அடிக்கப்பட்டது
உடைகின்றன
கற்களும் குழந்தைகளும்!!




சப்பாத்துக்களைத் துடைத்தான்
தூசு தட்டுப்படட்டும்
மனங்களில் இருந்து.




பெரும் பாலபிஷேகம்
இறைவனுக்கு,
குழந்தைக்கு? 
வல்வையூரான்.

சனி, 18 மே, 2013

ஈழத்தை அமைக்கும் நம்பு.

 

முள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள்
முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம்  பிணங்கள்
முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்கு
முன்னேற்றமிழந்து போனது இன்றுபோல் உள்ளது



காலங்காலமாய் தமிழனை எதிர்த்த
கண்ணாடிக்கர னொருவன்
கலந்தே இருந்த இன்னொருவன்
கடிதென விலகி கரைமாறி நின்றவன்.


காட்டி கொடுத்தே  கலைத்தமிழை
கயவர் அழிக்க  கருத்தோடு உதவினர்
கருக் குழந்தை முதல் கட்டிளம் காளையர்
கன்னியர்  கனவான்கள் வயோதிபர் பெண்கள்

வயது வேறுபாடின்றி வகை தொகையுமின்றி
வளைத்து வைத்து கொண் றோழித்தனர்
வழக்க மில்லா குண்டுகள் கொண்டே
வஞ்சக மான உதவிகள் கொண்டே


போர் விதிமுறை எல்லாம்
போக்கியே வீணர் வென்றனர் கொண்டாடினர்
போதி மரத்தவன் நாமம் புகன்றே
போதித்த தருமத்தை புத்தியில் கொள்ளாதோர்

இன மானம் உள்ளோன் தமிழன்
இருன்டிடா விரம்  கொண்டோன் தமிழன்
இருந்திட்ட அரசுகளடக்கி ஆண்டவன் தமிழன்
இலங்கையின் மூத்த குடியும் தமிழன்


வென்றிட்ட வீர பரம்பரையை சிங்களம்
வெல்லவே உலகெலாம் உதவி வாங்கி
வேதனைப்படுத்தி மக்களைக் கொன் றொழித்து
வெடி கொளுத்தி கொண்டாடுதாம் வெற்றிநாள்(???!!!)

இத்தனை உயிர்களின் ஆத்மா ஒருநாள்
இயங்கியே வந்து இயக்கம் அமைத்து
இழந்ததை எல்லாம் இயல்பாய் வென்று
இனிய ஈழத்தை அமைக்கும் நம்பு.

வல்வையூரான்.

செவ்வாய், 14 மே, 2013

ஹைக்கூக்கள் 13.






நான் விழுந்ததும், வலித்தது
எனக்கல்ல
தாய்க்கு.




இன்றும் எங்கும்
விற்பனைக்கில்லை
தாயன்பு.



உள்ளே போனதால்
உளறப்பட்டன உண்மைகளும்
குடி



அன்றிருந்தது
இன்றில்லை
நீயும் உன் அன்பும்.



பெண்மையில் திருடப்பட்டது
நாணம்
புதுமைப் பெண்?



அரிதாகின்றது
தமிழ்நாட்டில்
தமிழ் !!!.



அழகாய் தெரிவது
மலரா ?
மங்'கை'யா ??



என் இதயம் துடிக்காமலே இருந்துவிடட்டும்
பத்திரமாக
அவள் தூங்குகிறாள்.



சுயிங்கமாகியது வாழ்க்கை
தினமும்
சப்பப்படுகிறது, இழுக்கப்படுகிறது.

வல்வையூரான்.

சனி, 11 மே, 2013

ஹைக்கூக்கள் 12

 
மாணவர் போராட்டங்கள் இந்தியாவை உலுக்கிய நேரத்தில் எழுதப்பட்டவை இந்த ஹைக்கூக்கள்.




பசியால் நலிந்தாலும்
நலியாமல் வளர்வது
பட்டினிப் போராட்டம்.

இழுத்து மூடப்பட்டாலும்
முழுமூச்சாய் தொடர்கிறது
முன்மாதிரிகளின் போராட்டம்.



மயங்கி கிடந்தவர்களையும்
விழிக்க வைத்திருக்கிறது
மயங்கிய இவர்கள் போராட்டம்



விசிறிகளுக்கும்
வியர்த்துக் கொட்டுகிறது
விடுக்கப்பட்ட(??!!) அறிக்கை.

 

அரச நிழலில் அமர்ந்திருப்பது
புத்தனல்ல
புதுப் பேய்கள்.
வல்வையூரான்.

செவ்வாய், 7 மே, 2013

ஹைக்கூக்கள் 11

கண் விழித்ததும் கைபேசி
முழு ஆக்கிரமிப்பாய் நீ
முகப்புபக்கம்




நாளைய பொழுதுகளில்
காணாமல் போகின்றன
நேற்றுக்கள்



சிலுவையில் இன்று
அறையப்படுகின்றன
சிலுவைகளும்.



குளிர் நிழலில் இருந்தாலும்
கொதித்தபடி இருந்தது
மனசு.



பிறந்தநாளில் சந்தோசமாக இருக்கையில்
பின்னால் நின்று சிரித்தது காலம்
நான் போகின்றேன் என்று.



சிரித்தபோது வலித்தது
உதடுகள் மட்டுமல்ல
உள்ளிருந்த வேதனையும் தான்.



உனக்கான இருப்பை 'நான்'
தேடிக்கொண்டிருக்கின்றேன்
என்னைக் காணாமலே.



உறவுகள் உருமாறியது
உருவானது
பணம்.



நிரந்தர வாடிக்கையாளனாக நான்
நித்திய வியாபாரியாகவே
இறைவன்.
வல்வையூரான்.