ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

திருமணவாழ்த்து.



கேசவன் தாரிகா 
இருவரும்
இரு மனமும் ஒரு மனமாய்
ஈருடல் ஓருயிராய்

இன்பத்திலும் துன்பத்திலும் 
இணைந்து
இல்லறத்தை நல்லறமாய்
நடத்தி
தங்கம் போல் தமிழை 
வளர்த்து காத்து 
வாழையடி வாழை போல்
வையம் உள்ளளவும் 
வல்வை முத்துமாரி அருளோடு
வளமான பதினாறு செல்வங்கள் பெற்று 
வானோங்க வாழ
வாழ்த்துகின்றோம்.

அன்புடன் 
வல்வையூரான்.


முத்தம்.

 
பேனையை விட
எனக்கு
பென்சிலாக
இருக்க ஆசை

ஏனெனில்
நீ சீவி
கூர் பார்க்கையில்
உன் கன்னங்களில்
அடிக்கடி...
முத்தமிடலாம்
.

வல்வையூரான்.
 

சனி, 27 ஏப்ரல், 2013

ஹைக்கூக்கள் 10


பார்த்து சிரித்ததால்
முறிந்தது
அடுத்த வேலியின் பூவரசந்தடி




மங்கலம் பாடிக்கொண்டிருந்தாள் மனைவி மங்களம்
தலையாட்டிக்கொண்டிருந்தது
வேலியில் இருந்த ஓணான்



இராணுவத்தால் வெட்டப்பட்டிருந்தது வேலி
அழகாய் தெரிந்தது
பக்கத்து வீட்டு கிணற்றடி



இற்றுப் போனது கூரை
சிரித்தன
விண்மீன்கள்
 



நீ தூங்கியதால்
நான் தூங்கவில்லை
குறட்டை.



விரல்களின் நளினத்தால் விளைந்தது
நல்ல இசை
நடனமாடியது குழந்தை.
 
 



நிலவில் கூட மேடுபள்ளமுண்டு
இல்லை உன்முகத்தில்
மேக்கப்.

வல்வையூரான்.