வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

சந்நிதி வேலவனே

சந்நிதி வேலவனே 
சஞ்சலம் தீர்ப்பவனே
ஆலிலை அமுதுன்பவனே
அமரர்களுக் கருள் செய்பவனே
கோலெடுத்து தண்டபாணியாய் நின்றவனே
கோபித்து ஞானப்பழ்னி சென்றவனே

மாங்கனிக்காய் மயிலேறிச் சென்றவனே
மாது வள்ளிக்காய் தினைப்புனமேறி வந்தவனே

வேதியனாய் பின் வேங்கை மரமாகி நின்றவனே
வேலாகி தொண்டைமானா ராமர்ந்தவனே

வாய்கட்டி பூசை ஏற்றவனே
வாசலெங்கும் காவடிகள் கொண்டவனே

அன்னதானக் கந்தனே
ஆற்றங்கரை அருகமர்ந்தவனே

பூவரசமரம் கொண்ட புண்ணியனே
பூசை முறைக்கு கதிர்காமம் காட்டியவனே

மருதர் கதிர்காமரோடமர்த்து கதைத்தவனே
மாசிலா முகமாறு கொண்டவனே

நெடுந்தேரேறி வந்தவனே
நேசமாய் தெய்வயானையை மணந்தவனே

புதுமைகள் எல்லாம் கொண்டவனே
புலத்திலும் எம்மை காத்தருள்வாய்

வல்வையூரான் 

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

இளநீர்.



"என்ன சுந்தரத்தார்? பலத்த யோசனை போல!..."
கேட்டபடி திண்ணையில் வந்தமர்ந்தார் பரமசிவத்தார்.
          "அப்பிடி ஒண்டுமில்லை அண்ணே......"
சிரித்து சமாளித்தார் சுந்தரத்தார்.
          "வாங்கோ அண்ணை,... இந்த காண்டவன வெயில்ல எங்க போறியள்?..."
          “இல்ல சுந்தரத்தார் தோட்டத்திலே தேங்காய் பறிக்க ஆள் அனுப்பினான். அதுதான் ஒருக்கா பார்த்து வரவெண்டு வெளிகிட்டனான். வழியில உம்மை பார்த்ததும் சும்மா விசாரிச்சுட்டு போவம் எண்டுதான்... எப்பிடி இருக்கிறீர்உம்மிட அவாக்கு இப்ப உடம்பு பரவாயில்லையோமகண்ட சேதி ஏதும் தெரியுமோ?....
 அடுக்கடுக்காக கேள்விகள் அடுக்கினார் பரமசிவதார்.
          "எதோ இருக்கிறம் ....."
என்றவாறு உள்ளே திரும்பி
          "கமலம் பரமசிவமண்ணா வந்திருக்கிறார். ஒரு தேத்தண்ணி கொண்டு வா.......
இரைந்தார்
          "இல்ல சுந்தரம். எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கு. பிறகு ஒரு நாள் வாரன். ஆறுதலாக இருந்து கதைப்போம். ஒரு எட்டு தோட்டத்தையும் பார்த்துட்டு போகணும். வாரன்.... உள்ளேயும் சொல்லுங்கோ....
என்ற வண்ணம் மீண்டும் தெருவில் இறங்கி நடந்தார் பரமசிவதார்.
     "ஓம் அண்ணே பிறகு நேரமிருக்கேக்க வாங்கோ......"
ஏதேதோ சொல்லி வழியனுப்பினார் சுந்தரம். பரமசிவம் கேட்ட கடைசி கேள்வி மீண்டும் சுந்தரதார் காதில் எதிரொலித்தது.
‘மகன்ட சேதி ஏதும் தெரிமோ?
சுந்தரம் கமலம் கலியாணமாகி வருடங்கள் பிள்ளை செல்வம் கிடைக்கவில்லை. கமலமும் சுந்தரமும் குழந்தை வேண்டி எல்லா விரதங்களும் இருந்து பிறந்தவன் தான் கண்ணன். கண்ணன் ஒரே பிள்ளை. நீண்ட காலத்தின் பின் பிறந்தவன். எனவே பெற்றோர் அவனுக்கு மிகுந்த செல்லம் கொடுத்து வளர்த்தனர். சிறு வயதிலையே மிகுந்த சுட்டியாக வந்தான் கண்ணன். கண்ணனின் குழப்படிகள் பொறுக்காமல் எப்போதாவது சுந்தரர் கை ஓங்கினால் உடனே கமலம் வந்து நிற்பாள்.
     "தவம் கிடந்தது பெத்த பிள்ளையை அடிக்க வாரியலே. உங்களுக்கு அறிவிருக்கே....."
சரமாரியாக பொறிய ஆரம்பிப்பாள் கமலம். சுந்தரம் ஏன் வாதம் செய்து சண்டையை வளர்ப்பான் எண்டு ஒதுங்கி விடுவார். குழந்தை பிள்ளைக்கும் நாய் குட்டிக்கும் செல்லம் குடுக்க கூடாது என்று பெரியவர்கள் கூறுவது கண்ணனின் விசயத்தில் சரியாகத்தான் இருந்தது. வளர வளர நினைத்ததெல்லாம் வேண்டுமென அடம்பிடிக்க ஆரம்பித்தான். சுந்தரமும் கமலமும் அவனுக்காகவே வாழ ஆரம்பித்தனர். அளவுக்கு மீறிய செல்லம், கண்ணடிக்க என்று யாருமற்ற நிலை கண்ணன் படிப்பில் ஆட்டம் காட்ட வைத்தது. எதோ ஒரு மாதிரி க.பொ.த சாதாரணதரம் வரை படித்து முடித்தான். அதற்கு மேல் படிக்குமாறு கமலம் அவனிடம் எவ்வளவோ கெஞ்சியும் முடியாமல் போனது.

பள்ளி படிப்பை நிறுத்தியவன் காதல் படிப்பு படிப்பதாக சுந்தரம் காதுக்கு எட்டியது. கூப்பிட்டு கண்டிக்க முடியாது. கமலம் கத்துவாள் என்பதை விட அவன் வயதும் நாட்டு நிலையம் சுந்தரருக்கு கலக்கத்தை தந்தது. சில தினங்களுக்கு முன் தான் பக்கத்து தெருவில் தகப்பன் அடித்ததில் ஒரு மகன் வீட்டை விட்டு ஓடி இருந்தான்.

சுந்தரம் ஒன்றும் வசதியானவர் கிடையாது. கமலத்தை திருமணம் முடிக்கையில் கமலம் தனக்குரிய சில நகைகளுடன் ஒரு வீடும் சீதனமாக கொண்டு வந்திருந்தாள். சுந்தரரின் வாழ்வில் பரந்தனில் இரண்டு வயல் காணி சொந்தமாக இருந்தது. சுந்தரம் தன் உழைப்பில் ஒரு டக்டர் வாங்கி இருந்தார். இரண்டு வயல் குத்தகைக்கு எடுத்து நான்கு வயல்களையும் செய்வார். அத்தோடு வயல் உழவு, சூடடிப்பு என டக்டரையும் ஓடுவதில் ஒரு கணிசமான வரும்படி இருந்தது. வயல் இல்லாத நேரத்தில் வன்னியில் இருந்து கிடுகு, தேங்காய் மட்டை ஏற்றி யாழ் பகுதியில் ஊர் ஊராக சென்று விற்பார். சோற்றுக்கு கஷ்டமில்லை என்றாலும் பெரிய மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் கட்டவில்லை அவர்.

ஆனாலும் கண்ணன் கேட்ட எதையும் சுந்தரம் தம்பதியினர் மறுத்ததில்லை. பரீட்சை முடிந்த கையேடு கண்ணன் தாயிடம் கேட்டான்
     "அம்மா எனக்கொரு மோட்டர் சைக்கிள் வேணும். அப்பாட்ட சொல்லி வாங்கித்தானே."

உடனடியாக தாயின் நகைகள் அடகு வைக்கப்பட்டு ஒன்றே கால் லச்சத்துக்கு கிறோ ஹோண்டா பைசன் பிளாஸ் வாங்கி கொடுக்கப்பட்டது. தினமும் அதில் ஏறி மற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு சும்மாவே சுற்றி வந்தான். அதற்க்கு பெற்றோல் செலவு என தினமும் சில நூறு ரூபாக்களை சுந்தரம் இழக்க வேண்டி வந்தது. நாட்டு நிலைமையும் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஆங்கங்கே ஆட்கள் தினமும் காணமல் போய்கொண்டு இருந்தனர். ஒரே குழு என்ற நிலை மாறி இன்று பல இனம்தெரியாத பெயரில்லாத குழுக்கள் புதிது புதிதாய் முளைத்து அட்டகாசத்தை ஆரம்பித்திருந்தன. இந்த சூழலில் கண்ணன் மோட்டார் சைக்கிள் ஓட்டம் பெற்றோருக்கு கலக்கத்தை தர ஆரம்பித்தது. கண்ணன் இப்பொழுது நல்ல வாட்டசாட்டமான ஆண்பிள்ளை நண்பர்களுடன் சேர்ந்து இப்போது ஜிம் வேறு சென்று வந்தான். உடல் உருண்டு திரண்டு அழகிய ஆணழகன் ஆகி இருந்தான். எங்கே தன் மகனும் காணமல் போனோர் பட்டியலில் சேர்ந்து விடுவானோ என்ற கலக்கம் ஒருபுரம், நகரின் வாகன நெரிசல் அதிகரித்திருந்ததும் கண்ணன் மோட்டார் சைக்கிளில் அவன் வாலிப சாகசம் காட்ட முயற்சிப்பது ஏன் எல்லாம் ‘என்ன நேரம் அவன் விபத்து செய்தி வரும் என்றே பெற்றோர் இருவரும் தவிக்க ஆரம்பித்தனர். சுந்தரமும் கமலமும் நன்கு ஜோசித்து கண்ணனை வெளியில் எங்காவது அனுப்பி விடுவதென முடிவு செய்தனர். அவர்கள் எதிர்பார்த்ததை விட கண்ணன் அவர்கள் முடிவை வெகுவாக ஆதரித்தான். பணம் தான் ஒரு பிரச்சனை.

சுந்தரம் யோசிக்கவில்லை ஒரே ஒரு மகன் அவனுக்கு இல்லாதது எதற்கு? வீட்டையும் காணியையும் அடைகு வைத்து சில இலட்சங்களை புரட்டினார். உழவு இயந்திரம், மோட்டர் சைக்கிள் மூலமும் சில இலட்சங்கள் கிடைத்தன. வேலைகள் துரிதமாக நடந்தன கமலம் தன் பங்குக்கு கண்ணனின் சாதகத்தை பலன் பார்த்தாள். கண்ணனுக்கு சுக்கிரதிசை ஆரம்பமாகி இருந்ததுடன் பத்தில் வியாழன் பத்தியை விட்டு கிளம்பும் என்று யோசியன் அடித்து கூறினான். கமலம் அர்ச்சனைகள், பிராத்தனைகள் என கோயில்களுக்கு சென்றாள். கமலத்தின் வேண்டுதலோ, கண்ணனின் வியாழன் பலனோ கண்ணன் மிக விரைவிலே புகலிட நாடொன்றுக்கு சென்று மிக விரைவில் பிரஜா உரிமையும் பெற்றுக்கொண்டான். எவ்வளவு விரைவில் அவன் வெளி நாடு சென்றானோ அவ்வளவு விரைவாக அவனது தாயையும், தந்தையையும், நாட்டையும் மறந்தான். அடவு வைத்த சொத்துக்கள் அறுதியாகின. சுந்தரமும், கமலமும் வீடுவாசல் இழந்து தெரிந்தவர்கள் காணியில் கொட்டில் வீடு அமைத்து வாழ்ந்துவருகின்றனர்.
     "என்னப்பா தேத்தண்ணி கேட்டியல் பரமசிவமண்ணாக்கு. இங்க நீங்க மட்டும் நிக்கிறியள்? இந்தாங்கோ நீங்களே இந்த தேத்தண்ணியை குடியுங்கோ...... எனக்கு குசினில வேலை இருக்கு......."
என்ற படி வந்த கமலம் தேனீரை திண்ணையில் வைத்து விட்டு உள் திரும்பினால்.வந்தவள் அறியாதவண்ணம் விழியோரம் வழிந்த கண்ணீரை துடைத்தபடி பெருமூச்சொன்றை விட்ட வண்ணம் நிஜ  உலகுக்கு திரும்பினார் சுந்தரம். கமலம் வைத்து விட்டு சென்ற தேநீரில் இருந்து வந்த ஆவியை பார்த்தபடி இருந்தார். எதிர் வீட்டு வானொலியில் இருந்து பாடல் கேட்டது.
     "தென்னையை வைச்சா இளநீரு........ பிள்ளையை பெத்தா கண்ணீரு....."
வல்வையூரான்.

சனி, 11 ஆகஸ்ட், 2012

அன்பின் நண்பனே !!!



அதிகமாய் நேசித்தேன் உன்னை - ஆனாலும்அசிங்கமாய் சோதித்தாய் என்னை.

ஆருமில்லை எனக்கென்றாய்- 
உனக்கு 
ஆன மட்டும் நானிருப்பேன் என்றேன்!!




ஊருமில்லை உற்றமில்லை எனக்கு என்றாய்
உலகில் அஞ்சாதே நானுண்டு உனக்கேன்றேன்



பாரதியின் கவிதை தான் எனக்கு உன்னை பார்கையில்
பலமுறை நினைவுக்கு வந்தது 'கண்ணன் என் சேவகன்..'


பாசம் இருக்கிறதே அது பாவம்  செய்தது
பாசம் கொடுக்க மட்டுமே தெரிகிறது  மறுக்க தெரிவதில்லை

பாசப்பும் பாசம் போல தானிருக்கும்
படிப்பினை பலமுறை பெற்றும் உறைக்குதில்லை.

தேசங்கள் பல கடந்திருந்தும் பாசத்தால் 
தெரிந்த சிலரே இணைந்திருந்தனர்




இணைந்தவர் எல்லாம் உண்மை பாசம்
இதுவென்று இயம்பினர் ஆனால்...

உதைக்கின்ற போது வலிக்கிறது 
உயிரும் நிலை குலைந்து போகிறது...

பதைக்கின்றது இதயம் உன் நிலைகண்டு - ஆனால்
சிதைக்கின்றது உந்தன் செய்கைகள் அதை.



விதைக்கின்ற விதைகள் எல்லாம் - பாரில்
விளைந்து பலன் தருவதில்லை.

முளைகின்ற கதிர்கள் எல்லாம் கூட 
முற்றி அரிசி ஆவதில்லை.

உடைந்தது என் நெஞ்சு மட்டுமாகவே இருக்கட்டும் 
உடைத்திடதே பலரின் நெஞ்சை.

மனங்களை புரிந்து வாழ் 
மாண்புகழ் சேர வாழ். 


 வல்வையூரான்




அன்பின் நண்பனே !!!




அதிகமாய் நேசித்தேன் உன்னை - ஆனாலும்
அசிங்கமாய் சோதித்தாய் என்னை.

ஆருமில்லை எனக்கென்றாய் - உனக்கு 
ஆனமட்டும் நானிருப்பேன் என்றேன்.

ஊருமில்லை உற்றமில்லை எனக்கு என்றாய்
உலகில் அஞ்சாதே நானுண்டு உனக்கேன்றேன்



பாரதியின் கவிதை தான் எனக்கு உன்னை பார்கையில்
பலமுறை நினைவுக்கு வந்தது 'கண்ணன் என் சேவகன்..'


பாசம் இருக்கிறதே அது பாவம்  செய்தது
பாசம் கொடுக்க மட்டுமே தெரிகிறது  மறுக்க தெரிவதில்லை

பாசப்பும் பாசம் போல தானிருக்கும்
படிப்பினை பலமுறை பெற்றும் உறைக்குதில்லை.

தேசங்கள் பல கடந்திருந்தும் பாசத்தால் 
தெரிந்த சிலரே இணைந்திருந்தனர்




இணைந்தவர் எல்லாம் உண்மை பாசம்
இதுவென்று இயம்பினர் ஆனால்...

உதைக்கின்ற போது வலிக்கிறது 
உயிரும் நிலை குலைந்து போகிறது...

பதைக்கின்றது இதயம் உன் நிலைகண்டு - ஆனால்
சிதைக்கின்றது உந்தன் செய்கைகள் அதை.



விதைக்கின்ற விதைகள் எல்லாம் - பாரில்
விளைந்து பலன் தருவதில்லை.

முளைகின்ற கதிர்கள் எல்லாம் கூட 
முற்றி அரிசி ஆவதில்லை.

உடைந்தது என் நெஞ்சு மட்டுமாகவே இருக்கட்டும் 
உடைத்திடதே பலரின் நெஞ்சை.

மனங்களை புரிந்து வாழ் 
மாண்புகழ் சேர வாழ். 


 வல்வையூரான்




ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

கனடா பயணம்.


கனடா எண்டு கப்பல்ல கனவுகளோட வந்தம்,
கப்பல் வந்து சேர்ந்த கடற்கரை விட்டோரியா.
காலம் பார்த்தால் அதுஆ.. கஸ்டு பதின்மூன்று.
கால் வச்சது இரவு, அங்க கன பதிவுகள் பத்திரங்கள்.

 கனடாவின் காலை கடும் குளிராதான் இருந்தது.
கன நேரம் ஆனபின்னும் இரவில் சூரியன் நின்றது.
காலை விடிந்தது எந்தன் கனவு பலித்தது என்றால், இல்லை
காலை விடிந்ததும் எந்தன் கையில் விலங்கு விழுந்தது.



 
நண்பர்கள் பிரிந்தனர். நானும் தனித்து நின்றனன்.
நண்பகலில் நால்வேறு பிரிவுகளாய் வந்தோருடன் நானும் குளித்து,
நல்ல சாப்பாடுகளை(!!!) சாப்பிட்டு, நன்றாய் சயனித்து, மாலை
நாலு மணிக்கு மேல வன்குவாருக்கு வந்தோம் வேறு கப்பல.



 
வந்குவாருக்கு வந்த எங்களை வரவேற்று இருத்தினர், பின்னர்
வாசலால உள் எடுத்து, வழங்கினர் பழைய செவ்வாடை, முன்னர்
வந்திருந்தோர் எல்லாம் வழக்கமும் பழக்கமும் இல்லாமல்
வாய்த்த மேனி காட்டி குளித்தனர். வெட்கத்தால் குனிந்தனர்.


 நீலப் பட்டி என்றும், பச்சை பட்டி என்றும் நிலைகள் பிரித்தனர்
நிலையான கதவங்களின் பின்னால் நிறுத்தினர் எம்மை.
நீள்தடி கொண்டு வருத்தினர் இல்லை, எனினும் வருந்தினோம்.
நினைவுகள் மட்டும் தாயகம் சுழன்றது. நிம்மதி இழந்தோம்.




 
இருந்தது இரண்டரை மாதம் நான் அங்கு, இன்னும் இருக்கினமாம்...
இரண்டாண்டு கழியவும், இருப்பவருக்கு இறைவன் துணை இருக்கட்டும்.
இதுதான் இப்ப செய்ய முடியும் எங்களால, இதுக்கு மேல என்ன செய்ய???
இங்கு நாங்களும் இருக்கிறோம், இக பர சுகங்கள் இழந்து.



 
வேலை வேலை என்டு போறம் தான், ஆனாலும் வேதனைகள் தான் மிச்சம்.
வேகவேகமாக பஸ் மாறி வேறு வேலைகள் செய்தாலும்,
வெறும் கைதான் மிச்சம் மதக்கடைசில. ‘எண்ட மனிசன்
வெளி நாட்டில நிக்குறார்என்று மார் மட்டும் தட்டலாம் மனிசிமார்.



 
ரெண்டாண்டு இப்படி போச்சு. இனிவரும் ஆண்டு.......?
இருக்குது பெரிய நம்பிக்கை. ம்ம்... நம்பிக்கைதானாம் வாழ்க்கை
இனிக்கின்ற வாழ்வு இருக்கும் எங்களுக்கும்.... இருப்பம்....
இறுதி வரை காத்திருப்பம், இறைவன்(???) கண் திறப்பான்... ம்ம்ம்..... 


                                                         வல்வையூரான்.


கனடா பயணம்.

கனடா எண்டு கப்பல்ல கனவுகளோட வந்தம்,
கப்பல் வந்து சேர்ந்த கடற்கரை விட்டோரியா.
காலம் பார்த்தால் அதுஆ.. கஸ்டு பதின்மூன்று.
கால் வச்சது இரவு, அங்க கன பதிவுகள் பத்திரங்கள்.



 
கனடாவின் காலை கடும் குளிராதான் இருந்தது.
கன நேரம் ஆனபின்னும் இரவில் சூரியன் நின்றது.
காலை விடிந்தது எந்தன் கனவு பலித்தது என்றால், இல்லை
காலை விடிந்ததும் எந்தன் கையில் விலங்கு விழுந்தது.



 
நண்பர்கள் பிரிந்தனர். நானும் தனித்து நின்றனன்.
நண்பகலில் நால்வேறு பிரிவுகளாய் வந்தோருடன் நானும் குளித்து,
நல்ல சாப்பாடுகளை(!!!) சாப்பிட்டு, நன்றாய் சயனித்து, மாலை
நாலு மணிக்கு மேல வன்குவாருக்கு வந்தோம் வேறு கப்பல.



 
வந்குவாருக்கு வந்த எங்களை வரவேற்று இருத்தினர், பின்னர்
வாசலால உள் எடுத்து, வழங்கினர் பழைய செவ்வாடை, முன்னர்
வந்திருந்தோர் எல்லாம் வழக்கமும் பழக்கமும் இல்லாமல்
வாய்த்த மேனி காட்டி குளித்தனர். வெட்கத்தால் குனிந்தனர்.


 நீலப் பட்டி என்றும், பச்சை பட்டி என்றும் நிலைகள் பிரித்தனர்
நிலையான கதவங்களின் பின்னால் நிறுத்தினர் எம்மை.
நீள்தடி கொண்டு வருத்தினர் இல்லை, எனினும் வருந்தினோம்.
நினைவுகள் மட்டும் தாயகம் சுழன்றது. நிம்மதி இழந்தோம்.




 
இருந்தது இரண்டரை மாதம் நான் அங்கு, இன்னும் இருக்கினமாம்...
இரண்டாண்டு கழியவும், இருப்பவருக்கு இறைவன் துணை இருக்கட்டும்.
இதுதான் இப்ப செய்ய முடியும் எங்களால, இதுக்கு மேல என்ன செய்ய???
இங்கு நாங்களும் இருக்கிறோம், இக பர சுகங்கள் இழந்து.



 
வேலை வேலை என்டு போறம் தான், ஆனாலும் வேதனைகள் தான் மிச்சம்.
வேகவேகமாக பஸ் மாறி வேறு வேலைகள் செய்தாலும்,
வெறும் கைதான் மிச்சம் மதக்கடைசில. ‘எண்ட மனிசன்
வெளி நாட்டில நிக்குறார் என்று மார் மட்டும் தட்டலாம் மனிசிமார்.



 
ரெண்டாண்டு இப்படி போச்சு. இனிவரும் ஆண்டு.......?
இருக்குது பெரிய நம்பிக்கை. ம்ம்... நம்பிக்கைதானாம் வாழ்க்கை
இனிக்கின்ற வாழ்வு இருக்கும் எங்களுக்கும்.... இருப்பம்....
இறுதி வரை காத்திருப்பம், இறைவன்(???) கண் திறப்பான்... ம்ம்ம்..... 


                                                         வல்வையூரான்.