வெள்ளி, 29 ஜூன், 2012

பள்ளிக்காதல்.

சந்தானத்திற்கு சந்தோசத்தில் மனம் இருப்புக் கொள்ளாமல் தவித்தது. இருக்காதா என்னஅவன் பள்ளி தோழி தனம் என்னும் தனலட்சுமிக்கு மாலையிட உள்ள பொன்னான நாளல்லவா இன்று. இன்னும் சிறிது நேரத்தில் பெண்வீட்டார் மாப்பிள்ளை அழைக்க வந்து விடுவர். 

தனத்தை மடக்குவதற்கு அவன் எவ்வளவு கஷ்டப்பட்டான் என்பது அவனுக்கும் அந்த கடவுளுக்கும் தான் வெளிச்சம்.

சந்தானமும் தனமும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். தனம் சிறு வயது முதல் அதே பாடசாலையில் படித்து வருபவள். சந்தானம் ஒன்பதாம் ஆண்டு வரை திருகோணமலையில் படித்துவிட்டு தகப்பனுக்கு சிங்கள இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கவே அவனும் தாயும் தம்பியும் அவர்களது சொந்த ஊரான கிளிநொச்சிக்கு வந்து சேர்ந்தனர். பாடசாலை சேர்ந்த முதல் நாள் இன்றும் அவனுக்கு நினைவில் நின்றது. யாரையும் தெரியாத வகுப்பில் அவனுக்கு பக்கத்து வரிசையில் தனம் சிறு பொம்மை போல் அமர்ந்திருந்தது அவன் மனக்கண்ணில் நின்றது.

வந்த அன்றில் இருந்தே தனத்தின் மீது சந்தானத்திற்கு ஓர் இனம் புரியாத ஈர்ப்பு. நாளாக நாளாகத்தான் அவனுக்கு அது தெரிந்தது, அவன் அவளை காதலிப்பதாக. அவன் மட்டும் இல்லை, அவள் வகுப்பை விட கூடியவர்கள் கூட அவளை காதலிப்பதற்கு வரிசையில் நின்றார்கள். தனம் அந்த பாடசாலையின் தலை சிறந்த அழகி.

அவள் வகுப்பில் இருந்து வெளியே வந்தால் அவளை கண்டு வழிவதற்கு இருவராவது வாசலில் காத்திருப்பர். அவளுக்கு வரும் காதல் கடிதங்களும் எண்ணிவிட முடியாது. ஆனாலும் தனம் எதையும் லட்சியம் செய்ததாக இல்லை. தான் உண்டு, தன் படிப்புண்டு என இருந்தாள். தனம் சுமாராக படிக்ககூடியவள் தான்.

நாட்டு சுழல் அனைவரையும் இடம்பெயர வைத்தது. பலர் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றனர். கால சக்கர சுழற்சியிலே சந்தானம் லண்டன் போயிருந்தான். லண்டனில் அவன் மாமா கூட தங்கி இருந்தான். மாமா அவனை லண்டன் கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் சேர்த்து விட்டிருந்தார். சந்தானம் பட்டம் முடித்தான்.

வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்றவன் என்றாலே ஊரில் இருக்கும் மணமகன் சந்தையில், ஊரில் உள்ள படித்த மாப்பிள்ளைகளை விட அதிக மதிப்பாக பெண்ணைப் பெற்றவர் நினைக்கின்ற காலமிது. சந்தானம் லண்டனிலேயே உள்ள படித்த மாப்பிள்ளை. பெண் வீட்டார் படை எடுக்க ஆரம்பித்தனர். தனத்தின் பெற்றோர் மட்டும் என்ன விதி விலக்காஅவர்களும் தனத்தின் படத்தை கொண்டு வந்து சந்தானத்தை மாப்பிள்ளை கேட்டனர். சந்தானத்தின் பெற்றோர் எல்லா படங்களையும் சந்தனத்தின் தம்பி சாரு முலமாக ஈமெயில் பண்ணி இருந்தனர். ஈமெயிலை திறந்த சந்தானத்துக்கு தலை கால் புரியாத சந்தோசம். உடனேயே தொலைபேசியில் தாயிடம் கூறி விட்டான், தனத்தை பேசி முடிக்கும் படி.

மிக விரைவிலே திருமணம் நிச்சயிக்கப்பட்டு சந்தானம் நாடு திரும்பி இருந்தான். சந்தானம் வந்ததும் திருமண ஏற்பாடுகள் மளமளவென ஆரம்பமாகின. பந்தல் போடல், மாப்பிளை பார்த்து, கொழக்கட்டை கொடுத்தல், பெண் பார்க்க புட்டு கொண்டது செல்லல் என எல்லாம் விமர்சையாக நடந்தன. சந்தானம் நாடு திரும்புவதற்கு முதலே தினமும் தனத்துடன் அரைமணி நேரத்திற்கு குறையாமல் பேசிவந்தான். இதுவரை காலமும் பேசாத காதல் கதை முழுவதையும் சந்தானம் பேசினான். ஆனாலும் இன்னுமும் முடியவில்லை.

முந்தநாள் காலை பொன்னுருக்கு வைத்தனர். அன்று மாலை தனத்தை பார்க்க கிளம்பிய சந்தானத்தை அவன் அம்மா மெதுவாக உள் அழைத்து
     தம்பி பொன்னுருகினா வீட்ட விட்டு நீ வெளிய போககூடாது. இரண்டு நாள் தானே! பிறகு அவ உன்னோட தானே காலம் முழுக்க இருப்பா பொறுமையா இருடா

 அன்பாக வேண்டினாள். தட்ட முடியவில்லை அம்மாவுக்கு என்ன தெரியும்பார்க்காமல் பேசாமல் இருப்பது எவ்வளவு கஷ்டம்….

          ‘இதோ இன்றோடு மூன்று நாள் முடியும். நானும் தாலி கட்டி விடுவேன்.ம்............மேளச்சத்தம் கேட்கிறது.அவியல் வரியினம் போல'

பெண் வீட்டார் மாப்பிள்ளை அழைக்க வந்திருந்தனர். மாப்பிள்ளைக்கான வேஷ்டி சால்வைகள் தட்டில் வந்திருந்தன. தட்டை கொண்டு சாமியறையினுள் வந்தாள் அம்மா

          “தம்பி இந்த வேஷ்டி சால்வைய கட்டு நான் உண்ட மாமா மாமிக்கும் தோழனுக்கும் சாப்பாடு போடணும். கெதியா கட்டு ராகு காலத்துக்குள்ள அங்க போய் நீ மணவறையில் இருக்க வேணும்

என்ற படி வெளியேறினாள். அவன் வேஷ்டி கட்டி முடித்ததும் வீடியோ படப்பிடிப்பாளர்கள் அவனை விதம் விதமாக படம் பிடித்தனர். அப்பா அவர்களை அவசரப்படுத்தினார்.

இதோ சர வெடி முழங்க மேளதாளங்களுடன் தனம் வீடு நோக்கி சந்தானம் புறப்பட்டாகி விட்டது. வாசலில் தோழன் கால் கழுவி விட அவன் கையில் ஒரு ஒன்றரை பவுன் மோதிரத்தை எடுத்து போட்டான் சந்தானம். பின்னர் மணவறையில் சென்று அமர அங்கு தயாராய் இருந்த ஐயர் அவன் கையில் தருப்பை புல் மோதிரத்தை செருகி
    
     'சுக்கிலாம் பரதம் ........'

என மந்திரத்தை ஆரம்பித்து அவன் கையில் மஞ்சள் கங்கன நூலைகட்டி, பெண்ணை அழைத்து வர செய்து அவள் கையிலும் நூலைக்கட்டி திருமண கன்னிகாதான கிரியைகளை வேகமாக நடத்தினார். அவன் வீட்டார் கொண்டு வந்த கூரைப்புடவை தனம் கையில் கொடுக்கப்பட்டது. தாளித்தட்டு சபையோரின் ஆசிர்வாதத்திற்காக சந்தானந்தின் தந்தை எடுத்துச்சென்றிருந்தார்.

     'இன்னும் அரை மணி நேரத்தில் தனம் எனது மனைவி'

சந்தானம் தனது மனதில் நினைத்துக்கொண்டான். தனம் மீண்டும் வந்து மணவறையில் அமர்ந்தாள். ஐயர் சந்தானத்தின் கையில் தாலியை கொடுத்து விளக்கை எடுத்து தம்பதியினரின் பின்னால் இருந்தவர்களிடம் கொடுத்து தாலி கட்டுவதற்கான பூர்வாங்க வேலைகளை முடிந்தவுடன், சந்தனத்திற்கு கண்ணால் சைகை செய்தார். இந்த கணத்திற்காக காத்திருந்த சந்தானம் தனம் கழுத்தில் மங்கள நூலை அணிவித்தான்.

     கெட்டி மேளம்....... கெட்டி மேளம் ......மாங்கல்யம் தந்து நானே நாம ஜீவன கேதுநாம் வந்தே சுப பத்திராணி தோம் ஜீவ சரத்ச்சரம்.......

கெட்டி மேளம் கொட்ட தாலியை கட்டினான் சந்தானம்.

          “பளார்..... பளார் ….”

வெளியே சரவெடி! இல்லை சந்தானத்தின் முதுகில் வலிப்பதுபோல் உணர்ந்தான். அவனுக்கு நிலைமை புரியவில்லை. ஆனாலும் தாலியை கட்டி தனத்தை தன்னவளாக்க அவசரம் அவனுக்கு. மீண்டும்

     பளார்.......”

இப்போது சந்தானத்திற்கு அதிகமாக வலித்தது. பின்பக்கம் நிமிர்ந்து திரும்பினான் சந்தானம், தாலியை எடுத்துக்கொண்டு.

என்ன சுப்பிரமணியம் சேர் கையில பூவரசம் தடியோட பொடிகள் எல்லாம் கொல் என்று சிரிக்கும் சத்தம்.

          “சனியன் போன வருஷம் O/L பெயில் விட்டுட்டு திருப்பி படிகுறன் எண்டு, பெத்ததுகளின் காசை காரியாக்க பேசல் கிளாஸ் வரது...... அம்மா கணிதப்பாடத்துக்கு போட்டு வாறன் எண்டுட்டு.......... இங்க வந்து நித்திரை கொண்டு பகல் கனவு காணுதுகள்........”

திட்டியபடி மீண்டும் அடித்தார் சேர்.

          “அப்ப எப்படி எண்ட கையில தனத்திற்கு நான் கட்ட எண்ட தாலி எண்ர கையில.......

நினைத்தபடி கையைப் பார்த்தான் சந்தானம். அங்கு கரும்பலகையில் அவன் சேர் வட்டம் வரைவதற்காக வைத்திருந்த நூல், துண்டுச்சோக்கோடு இருந்தது. வகுப்புக்கு முன்பாகவே வந்து அதை எடுத்து ஒளித்து வைத்தது இப்போது ஞாபகத்திற்கு வந்தது.

வல்வையூரான்

பள்ளிக்காதல்.

சந்தானத்திற்கு சந்தோசத்தில் மனம் இருப்புக் கொள்ளாமல் தவித்தது. இருக்காதா என்ன? அவன் பள்ளி தோழி தனம் என்னும் தனலட்சுமிக்கு மாலையிட உள்ள பொன்னான நாளல்லவா இன்று. இன்னும் சிறிது நேரத்தில் பெண்வீட்டார் மாப்பிள்ளை அழைக்க வந்து விடுவர். 

தனத்தை மடக்குவதற்கு அவன் எவ்வளவு கஷ்டப்பட்டான் என்பது அவனுக்கும் அந்த கடவுளுக்கும் தான் வெளிச்சம்.

சந்தானமும் தனமும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். தனம் சிறு வயது முதல் அதே பாடசாலையில் படித்து வருபவள். சந்தானம் ஒன்பதாம் ஆண்டு வரை திருகோணமலையில் படித்துவிட்டு தகப்பனுக்கு சிங்கள இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கவே அவனும் தாயும் தம்பியும் அவர்களது சொந்த ஊரான கிளிநொச்சிக்கு வந்து சேர்ந்தனர். பாடசாலை சேர்ந்த முதல் நாள் இன்றும் அவனுக்கு நினைவில் நின்றது. யாரையும் தெரியாத வகுப்பில் அவனுக்கு பக்கத்து வரிசையில் தனம் சிறு பொம்மை போல் அமர்ந்திருந்தது அவன் மனக்கண்ணில் நின்றது.

வந்த அன்றில் இருந்தே தனத்தின் மீது சந்தானத்திற்கு ஓர் இனம் புரியாத ஈர்ப்பு. நாளாக நாளாகத்தான் அவனுக்கு அது தெரிந்தது, அவன் அவளை காதலிப்பதாக. அவன் மட்டும் இல்லை, அவள் வகுப்பை விட கூடியவர்கள் கூட அவளை காதலிப்பதற்கு வரிசையில் நின்றார்கள். தனம் அந்த பாடசாலையின் தலை சிறந்த அழகி.

அவள் வகுப்பில் இருந்து வெளியே வந்தால் அவளை கண்டு வழிவதற்கு இருவராவது வாசலில் காத்திருப்பர். அவளுக்கு வரும் காதல் கடிதங்களும் எண்ணிவிட முடியாது. ஆனாலும் தனம் எதையும் லட்சியம் செய்ததாக இல்லை. தான் உண்டு, தன் படிப்புண்டு என இருந்தாள். தனம் சுமாராக படிக்ககூடியவள் தான்.

நாட்டு சுழல் அனைவரையும் இடம்பெயர வைத்தது. பலர் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றனர். கால சக்கர சுழற்சியிலே சந்தானம் லண்டன் போயிருந்தான். லண்டனில் அவன் மாமா கூட தங்கி இருந்தான். மாமா அவனை லண்டன் கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் சேர்த்து விட்டிருந்தார். சந்தானம் பட்டம் முடித்தான்.

வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்றவன் என்றாலே ஊரில் இருக்கும் மணமகன் சந்தையில், ஊரில் உள்ள படித்த மாப்பிள்ளைகளை விட அதிக மதிப்பாக பெண்ணைப் பெற்றவர் நினைக்கின்ற காலமிது. சந்தானம் லண்டனிலேயே உள்ள படித்த மாப்பிள்ளை. பெண் வீட்டார் படை எடுக்க ஆரம்பித்தனர். தனத்தின் பெற்றோர் மட்டும் என்ன விதி விலக்கா? அவர்களும் தனத்தின் படத்தை கொண்டு வந்து சந்தானத்தை மாப்பிள்ளை கேட்டனர். சந்தானத்தின் பெற்றோர் எல்லா படங்களையும் சந்தனத்தின் தம்பி சாரு முலமாக ஈமெயில் பண்ணி இருந்தனர். ஈமெயிலை திறந்த சந்தானத்துக்கு தலை கால் புரியாத சந்தோசம். உடனேயே தொலைபேசியில் தாயிடம் கூறி விட்டான், தனத்தை பேசி முடிக்கும் படி.

மிக விரைவிலே திருமணம் நிச்சயிக்கப்பட்டு சந்தானம் நாடு திரும்பி இருந்தான். சந்தானம் வந்ததும் திருமண ஏற்பாடுகள் மளமளவென ஆரம்பமாகின. பந்தல் போடல், மாப்பிளை பார்த்து, கொழக்கட்டை கொடுத்தல், பெண் பார்க்க புட்டு கொண்டது செல்லல் என எல்லாம் விமர்சையாக நடந்தன. சந்தானம் நாடு திரும்புவதற்கு முதலே தினமும் தனத்துடன் அரைமணி நேரத்திற்கு குறையாமல் பேசிவந்தான். இதுவரை காலமும் பேசாத காதல் கதை முழுவதையும் சந்தானம் பேசினான். ஆனாலும் இன்னுமும் முடியவில்லை.

முந்தநாள் காலை பொன்னுருக்கு வைத்தனர். அன்று மாலை தனத்தை பார்க்க கிளம்பிய சந்தானத்தை அவன் அம்மா மெதுவாக உள் அழைத்து
     தம்பி பொன்னுருகினா வீட்ட விட்டு நீ வெளிய போககூடாது. இரண்டு நாள் தானே! பிறகு அவ உன்னோட தானே காலம் முழுக்க இருப்பா பொறுமையா இருடா

 அன்பாக வேண்டினாள். தட்ட முடியவில்லை அம்மாவுக்கு என்ன தெரியும்? பார்க்காமல் பேசாமல் இருப்பது எவ்வளவு கஷ்டம்….

          ‘இதோ இன்றோடு மூன்று நாள் முடியும். நானும் தாலி கட்டி விடுவேன்.ம்............மேளச்சத்தம் கேட்கிறது.அவியல் வரியினம் போல'

பெண் வீட்டார் மாப்பிள்ளை அழைக்க வந்திருந்தனர். மாப்பிள்ளைக்கான வேஷ்டி சால்வைகள் தட்டில் வந்திருந்தன. தட்டை கொண்டு சாமியறையினுள் வந்தாள் அம்மா

          “தம்பி இந்த வேஷ்டி சால்வைய கட்டு நான் உண்ட மாமா மாமிக்கும் தோழனுக்கும் சாப்பாடு போடணும். கெதியா கட்டு ராகு காலத்துக்குள்ள அங்க போய் நீ மணவறையில் இருக்க வேணும்

என்ற படி வெளியேறினாள். அவன் வேஷ்டி கட்டி முடித்ததும் வீடியோ படப்பிடிப்பாளர்கள் அவனை விதம் விதமாக படம் பிடித்தனர். அப்பா அவர்களை அவசரப்படுத்தினார்.

இதோ சர வெடி முழங்க மேளதாளங்களுடன் தனம் வீடு நோக்கி சந்தானம் புறப்பட்டாகி விட்டது. வாசலில் தோழன் கால் கழுவி விட அவன் கையில் ஒரு ஒன்றரை பவுன் மோதிரத்தை எடுத்து போட்டான் சந்தானம். பின்னர் மணவறையில் சென்று அமர அங்கு தயாராய் இருந்த ஐயர் அவன் கையில் தருப்பை புல் மோதிரத்தை செருகி
    
     'சுக்கிலாம் பரதம் ........'

என மந்திரத்தை ஆரம்பித்து அவன் கையில் மஞ்சள் கங்கன நூலைகட்டி, பெண்ணை அழைத்து வர செய்து அவள் கையிலும் நூலைக்கட்டி திருமண கன்னிகாதான கிரியைகளை வேகமாக நடத்தினார். அவன் வீட்டார் கொண்டு வந்த கூரைப்புடவை தனம் கையில் கொடுக்கப்பட்டது. தாளித்தட்டு சபையோரின் ஆசிர்வாதத்திற்காக சந்தானந்தின் தந்தை எடுத்துச்சென்றிருந்தார்.

     'இன்னும் அரை மணி நேரத்தில் தனம் எனது மனைவி'

சந்தானம் தனது மனதில் நினைத்துக்கொண்டான். தனம் மீண்டும் வந்து மணவறையில் அமர்ந்தாள். ஐயர் சந்தானத்தின் கையில் தாலியை கொடுத்து விளக்கை எடுத்து தம்பதியினரின் பின்னால் இருந்தவர்களிடம் கொடுத்து தாலி கட்டுவதற்கான பூர்வாங்க வேலைகளை முடிந்தவுடன், சந்தனத்திற்கு கண்ணால் சைகை செய்தார். இந்த கணத்திற்காக காத்திருந்த சந்தானம் தனம் கழுத்தில் மங்கள நூலை அணிவித்தான்.

     கெட்டி மேளம்....... கெட்டி மேளம் ......மாங்கல்யம் தந்து நானே நாம ஜீவன கேதுநாம் வந்தே சுப பத்திராணி தோம் ஜீவ சரத்ச்சரம்.......

கெட்டி மேளம் கொட்ட தாலியை கட்டினான் சந்தானம்.

          “பளார்..... பளார் ….”

வெளியே சரவெடி! இல்லை சந்தானத்தின் முதுகில் வலிப்பதுபோல் உணர்ந்தான். அவனுக்கு நிலைமை புரியவில்லை. ஆனாலும் தாலியை கட்டி தனத்தை தன்னவளாக்க அவசரம் அவனுக்கு. மீண்டும்

     பளார்.......”

இப்போது சந்தானத்திற்கு அதிகமாக வலித்தது. பின்பக்கம் நிமிர்ந்து திரும்பினான் சந்தானம், தாலியை எடுத்துக்கொண்டு.

என்ன சுப்பிரமணியம் சேர் கையில பூவரசம் தடியோட பொடிகள் எல்லாம் கொல் என்று சிரிக்கும் சத்தம்.

          “சனியன் போன வருஷம் O/L பெயில் விட்டுட்டு திருப்பி படிகுறன் எண்டு, பெத்ததுகளின் காசை காரியாக்க பேசல் கிளாஸ் வரது...... அம்மா கணிதப்பாடத்துக்கு போட்டு வாறன் எண்டுட்டு.......... இங்க வந்து நித்திரை கொண்டு பகல் கனவு காணுதுகள்........”

திட்டியபடி மீண்டும் அடித்தார் சேர்.

          “அப்ப எப்படி எண்ட கையில தனத்திற்கு நான் கட்ட எண்ட தாலி எண்ர கையில.......

நினைத்தபடி கையைப் பார்த்தான் சந்தானம். அங்கு கரும்பலகையில் அவன் சேர் வட்டம் வரைவதற்காக வைத்திருந்த நூல், துண்டுச்சோக்கோடு இருந்தது. வகுப்புக்கு முன்பாகவே வந்து அதை எடுத்து ஒளித்து வைத்தது இப்போது ஞாபகத்திற்கு வந்தது.

வல்வையூரான்

புதன், 20 ஜூன், 2012

இலட்சியக்கனவு

அகிலனும் குமுதனும் நண்பர்கள். குமுதன் சொந்த இடம் வவுனியா. அகிலனின் சொந்த இடம் கொடிகாமம். கடந்த இரண்டு வருடங்களாக அகிலன் தன் குடும்பத்தினருடன் வவுனியா சென்று வசித்து வருகிறான். 1996 இல் இடம் பெற்ற யாழ் இடப்பெயர்வுடன் கொடிகாமத்தில் இருந்து ஆறு வயது நிரம்பிய பையனாக வன்னிக்கு பெற்றோர்களுடன் இடம் பெயர்ந்திருந்தான்.

 அகிலன் வன்னியில் தருமபுரத்தில் இருந்து இப்போது வவுனியா! இலங்கைத் தமிழன் என்றாலே இடப்பெயர்வு குடிப்பெயர்வு என்பது சர்வசாதரனமான விடையமகிப்போனதேசிறு வயதில் அகிலன் தருமபுரத்தில் பாலர் கல்வியை ஆரம்பித்தான். சிறு வயதிலேயே கல்வியில் அதிக நாட்டம் இருந்தது. கல்வியில் மட்டுமல்ல விளையாட்டுகளிலும் அதிக நாட்டம் தான். இந்த கல்வி விளையடுகளில் அவனை ஊக்கம் கொடுத்து அவன் வீட்டில் வெற்றி கோப்பைகளையும்சான்றிதழ்களையும் வாங்கி அடுக்குவதற்கு மூல காரணகர்தாவே அவன் தந்தை சிவகடாச்சம் தான். சிறு வயதிலேயே காலை 5. 00௦௦ மணிக்கு அவனை நித்திரையால் எழுப்புவர் அவர்.

     அவன் சின்னப்பிள்ளை அவனை ஏன் இவ்வளவு வெள்ளன எழுப்புறியல் 

என்பாள் அவன் அம்மா மங்கை என்னும் மங்கையற்கரசி.

     நீ சும்மா இரு இப்ப எழுப்பினால் தான் படிச்சுட்டு கொஞ்சம் எக்சசைசும் செய்யலாம்..... தம்பி..... அகில்..... அகில்..... எழும்பன..... அம்மா முட்டைகோப்பி வைச்சிருக்கா எழும்பி முகத்தை அலம்பிட்டு குடிங்கோ..... ராசா படிக்கோனுமல்லோ..... அப்பா சொல்றது கேக்குதோ.....

அன்பாக மெதுவாக முட்டைக்கோபியை அடிப்பித்து வைத்து கொண்டு அவனை எழுப்புவார். எழும்புவதற்கு சோம்பலாக இருந்தாலும் அவரின் அன்புக்கு கட்டுப்பட்டு எழும்புவான் அகிலன். காலை கடன்களை முடித்து சுடச்சுட அவன் தாய் தரும் கோப்பியை ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டு அவன் படிப்தற்கு வந்தமர காலை 5. 15 ஆகி இருக்கும். 6. ௦௦00 மணி வரை படிப்பான் குப்பி விளக்கின் ஒளியில். 6. 00௦௦ மணிக்கு சரியாக அவனது தந்தை மீண்டும் வந்து அவனை ஓடுவதற்கு அழைத்து செல்வார். அவன் வாசித்த கொட்டிலுக்கு முன்னால் இருந்த மணல் வீதியில் தந்தையும் மகனும் மெதுவாக ஓடுவர். ஓடி திரும்பியதும் அவனுக்கு சிறிது நேரம் உடற்ப்பயிற்சி சொல்லி கொடுப்பார் சிவகடாச்சம். இவை எல்லாம் முடிகின்ற போது நேரம் அனேகமாக ஏழை எட்டிகொண்டிருகும். ஓர் கால் மணி நேர இடைவேளையின் பின் தந்தையும் மகனும் குளிக்கச்செல்வர். அகிலனுக்கு அப்பாவுடன் குளிப்பது என்றால் கொள்ளை பிரியம். குளித்து வரவும் தாய் சுடச்சுட காலை சிற்றுண்டியை இருவருக்கும் பரிமாறுவார். காலையில் தாயின் முகத்தை பார்த்த படியே சாப்பாட்டை சாப்பிட்டு முடிப்பான் அகிலன். கலையில் தாயின் முகத்தில் தெய்வீக கலை தெரிவதாக அடிக்கடி கூறுவான் அகிலன். உண்மை தான் இவன் படிக்க ஆரம்பித்ததுமே தாய் சென்று குளித்து விட்டு சாமி படங்களுக்கு பூ கொய்து வந்து வைத்து விளக்கேற்றி விடுவாள். நெற்றி நிறைய விபூதியும் நடுவில் குங்குமப்பொட்டும் வைத்து இருக்கும் மங்கையை காலையில் யார் பார்த்தாலும்.... அவ்வளவு லஷ்மிகரமாக இருப்பாள் மங்கை.

அன்பான தாய் தந்தையால் வளர்க்கப்படும் எந்தக் குழந்தையின் மனமும் உடலும் எப்பொழுதும் உற்சாகமாகவே இருக்கும். அகிலனுக்கும் எந்த குறையுமில்லை. எனவே அவன் கல்வியிலும் விளையாட்டிலும் முதலிடத்தில் இருப்பது அதிசயம் இல்லையே! அத்தோடு அகிலன் வேறு ஒரு பிள்ளை சிவம் மங்கை தம்பதியினருக்கு. எனவே தாய் தந்தை அவனுக்கு கேட்டதெல்லாம்...... இல்லை இல்லை கேட்காமலே எல்லாம் செய்தனர். அதே போல் அவனும் அவர்கள் பெயரை மங்க விடாதே வாழ்ந்து வந்தான்.

வகுப்பில் முதலாம் பிள்ளையாக வந்தான். பாடசாலை மட்டம்வலய மட்டம், மாவட்ட மட்டம் என பல பரிசுகளை படிப்பிலும் விளையாட்டிலும் பெற்று வந்தான். எல்லாம் ஒரு குறித்த வயது வரைதான். அவனுக்கு பதினான்கு வயது நடக்கும் போது கடைக்குப்போன அவன் தந்தை அங்கு இராணுவத்தினரின் குண்டு வீச்சு விமானங்கள் நடாத்திய மிலேச்ச தனமான குண்டு வீச்சில் அகப்பட்டு மாண்டு போனார்.

அவனுக்குஹீரோவாக” இருந்த அவன் தந்தையின் இழப்பு அவனை மிகவும் பாதித்தது. அவனை மட்டுமில்லை, அவன் தாயையும் பாதித்தது. அகிலனின் படிப்பு மெல்ல மெல்ல மங்கியது. ஆனால் விளையாட்டில் மட்டும் சிறிதளவு ஆர்வம் காட்டினான்.

காலச்சக்கரம் யாருக்காகவும் தான் சுழற்சியை நிறுத்தி வைப்பதிலையே! அது தொடர்ந்து சுழன்றது. அகிலன் தான் தாயுடன் பல இன்னல்களை அனுபவித்தான். நாட்டுச்சூழல் வேறு அவர்களை துரத்தியது. தொடர் இடப்பெயர்வுகள், பற்பல இழப்புகள்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வவுனியா வந்து சேர்ந்தனர், அகிலும் அவனது தாய் மங்கையும். வவுனியா வந்து அங்கு தெரிந்தவர்கள் வீட்டில் இருந்து கொண்டு அகிலன் தான் படிப்பை தொடர்ந்தான்.

அவனுக்கு பள்ளியில் கிடைத்த தோழன் தான் குமுதன். குமுதனுக்கு விளையாட்டு என்றால் உயிர். அவன் பெரிதாக படிப்பில் ஒன்றும் சாதிக்கவில்லை, என்றாலும் விளையாட்டு போட்டிகளில் அவன் பெற்ற கோப்பைகள் எத்தனை, கேடையங்கள் எத்தனை, பதக்கங்கள் என்ன, சான்றிதல்கள் என்ன அப்பப்பா!!! புதிய பாடசாலையில் விளையாட்டின் சாம்பியனாக இருந்த குமுதனை கண்டவுடனேயே அகிலனுக்கு பிடித்துவிட்டது.

இருவருக்கும் பொது பொழுது போக்கு விளையாட்டு. இருவரும் பாடசாலை வெளியே ஒரே விளையாட்டு கழகத்திற்கு விளையாடுகின்றனர் கால்பந்து. கழகத்தின் பந்து காப்பாளனாக அகிலனும் முன்னிலை வீரனாக குமுதனும் விளையாடுகின்றனர். உயர் தர பரீட்சை முடிந்ததும் இருவரும் முழு முச்சாக விளையாட்டு பயிற்சியிலே காலம் கழித்தனர்.

ஒரு நாள் காலை முற்றத்தில் அமர்ந்து தாய்க்கு தான் முதல் நாள் விளையாடிய ஆட்டத்தை வர்ணனை செய்து கொண்டிருந்தான் குமுதன். அங்கே அப்பொழுது வந்த அகிலன்

     என்ன மச்சான் அம்மாவுக்கு எதோ பிரசங்கம் செய்றாய்....

கேட்ட படியே உள்ளே நுழைந்தான்.

     இல்லடா நேற்றையான் மச்சப் பற்றி தான் சொல்லி கொண்டு இருக்குறேன். நீ என்ன திடீரெண்டு இந்த பக்கம் வந்திருக்க....?”

     இல்லைடா எங்கட சொந்தக்காரர் ஊரில ஆரோ செத்திடினமாம். அம்மா ஊருக்கு போக வேணுமெண்டவா. நானும் சொந்த ஊர பார்த்தது இல்லை தானே? அங்க எங்கட வீடு இருக்காம்... இதோட ஒருக்க போய் பார்த்துட்டு வரலாம் எண்டுதான்... உன்னட்ட சொல்லாம போனால் நீ கத்துவாய்... அது தான்...

     என்ன யாழ்ப்பாணம் கொடிகாமத்துக்கு போறியோ! நானும் யாழ்ப்பாணம் பார்த்ததில்லை. நானும் உங்களோடு வரட்டே?...
ஆர்வமாக கேட்டன் .குமுதன்

     நீ வாரதப்பத்தி ஒண்டுமில்லை... உண்ட அம்மாட்ட நீ முதலில பெர்மிசன் எடுகோனும்....

என்றவனை இடைமறித்தபடி வந்தாள் குமுதனின் தாய் கையில் அகிலனுக்கு தேனீரோடு

     என்ன யாழ்ப்பாணத்துக்கு தானே? வடிவா போட்டு வாங்கோ... ஏன் அகில் உங்கட அம்மாவும் வாரா தானே... பிறகென்ன...

என்று தன் சம்மதத்தை தந்தார் குமுதனின் தாய். நண்பர்களின் மகிழ்சிக்கு எல்லை கடந்தது.

உற்சாகமாக பயண ஏற்பாடுகளை செய்தனர். ஒரு வாரம் யாழில் தங்குவதற்கு முடிவு. அன்று மாலையே வவுனியாவில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டனர் அகிலனும், குமுதனும், மங்கையும்.
இரவு யாழ் சென்று சேர்ந்த அவர்கள், மறு நாள் மரண வீட்டிற்கு சென்றனர். அதற்கு அடுத்த நாள் கொடிகாமத்தில் அகிலன் குடும்பத்தினற்கு சொந்தமான தென்னக்கணியை பார்க்க சென்றனர்.

நீண்ட காலம் பராமரிக்க சரியானவர்கள் இல்லாததால் காணி சிதிலமடைந்து காணப்பட்டது. ஆனால் மரங்களுக்கு மட்டும் ஒற்றையடி பாதை காணப்பட்டது. யாரோ களவாக தேங்காய் பிடிங்கியவர்கள் அந்த பாதையை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

நண்பர்கள் இருவரும் ஒருவர் மரத்தில் ஏறி இளநீர் பறித்து போட்டு இறங்கி வர இருவரும் ஆசை தீர இளநீர் பருகினர். பின்னர் இளநீர் கோம்பையினால் ஒருவருக்கொருவர் செல்லமாக துரத்தி அடித்தனர். 
அகிலன் அங்கிருந்த சிறிய பற்றைகளை பாய்ந்து கடந்து ஓட குமுதன் அவனை துரத்தினான்.

     படார்....

என பலமான ஓசை தொடர்ந்து,

     ஐயோ அம்மா...

அலறிய படி கிழே விழுந்தான் குமுதன். நீண்ட காலமாக மண்ணில் புதைந்து விழித்திருந்த ஓர் நிலக்கண்ணி தான் வேலையை காட்டி இருந்தது. குமுதனின் அலறல் கேட்டு ஓடி வந்தான் அமுதன். மீண்டும்
 
     படார்...

     ஐயோ.... அம்மா.... ஐயோ....

இப்பொது அகிலன்அந்த காணியில் இருந்த இன்னுமொரு கண்ணிவெடி தன் வேலையை காட்டி இருந்தது. விழுந்த அகிலன் கையில் ஓர் வெளிறிய மட்டை தட்டுப்பட்டது. எடுத்துப் பார்த்தான் அதில் மிதி வெடி அபாயம் என காணப்பட்டது.

கால்பந்தில் தேசிய ரீதியில் பிரகாசிக்க வேண்டும் என்ற இலச்சிய கனவுடன் இருந்த இவர்களுக்கு கால்களே இல்லையே..... என்ன செய்வது இறைவா? 

 வல்வையூரான்