பேசவில்லை
நிறைய இருந்தன
உச்சரிக்கப்பட்டு வந்த அகிம்சை போரின்
உத்தம வடிவம்
உணர்வுள் கலந்தது 1987.09.26 10.48.
தனித் தனியாக விழுந்தாலும்
ஒற்றுமையாக கைகோர்த்து ஓடுகிறது
சக்தி கொண்ட மழை வெள்ளம்.
இரச(யன)த்தால்
மினுங்குகின்றன
கண்ணாடிகளும் முகங்களும்.
உதிர்ந்துகொண்டிருந்தன இலைகள்
உதிராமல் உதிரத்துள்
உன் நினைவுகள்
விரட்டிக்கொண்டிருந்தது காலம்
காலத்தை
காலத்தால்
இறந்ததான மஹிஷன்
இறக்காமல் இன்னும்
மனிதருள் மனங்களாய்
பிரிந்தவர்கள் கூடியபோது
பிரிந்தது
சோகம்
சிரிக்கின்றது சாவும் சிலவேளை
தன்னிலை மறந்து என்னைப் பார்த்து
உன்னால்...
அங்கும் இங்கும் சிரித்தன நட்சத்திரங்கள்
தெரிந்தது
பிய்ந்த கூரையூடு
மறைந்து இருந்ததை
மீட்டுவந்தது
மழை - வானவில்
ஆசையாய் ஊதிக்கொண்டிருந்தேன் குமிழிகளை
உடைந்தன எல்லாம்
என் மன ஆசைகள் போலவே
வல்வையூரான்.
| Tweet | |||||





















































